பிரதமர் உட்பட பிரபலங்கள் பங்கேற்ற சர்வதேச யோகா தினம்!

சர்வதேச யோகா தினம்!
பிரதமர் உட்பட பிரபலங்கள் பங்கேற்ற சர்வதேச யோகா தினம்!

உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பிரதமர் மோடி தலைமை வகிக்க உள்ளார். இதற்காக, நியூயார்க் சென்றடைந்த அவருக்கு, இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அமெரிக்காவில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று யோகா தின நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 9வது சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஐ.நா.,வில் நடக்கும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ள பிரதமர் மோடி , நாளை முதல் 23-ம் தேதி வரை அமெரிக்காவில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நாளை நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்பார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பல மாநில முதல்வர்கள், கவர்னர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று, யோகா செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், சர்வதேச யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நொய்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்றார். ஹிமாச்சல் பிரதேசத்தின் ஹமிர்பூரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பங்கேற்றார். உத்தரகண்ட் முதல்வர் தாமி, ஹரித்வாரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடந்த சர்வதேச யோகா நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மற்றும் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரும் பங்கேற்று யோகா செய்தனர். மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றனர். புனேவில் உள்ள சாவித்ரிபாய் பல்கலையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். மும்பையில் நடந்த மற்றுமொரு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பங்கேற்றார்.

டில்லியில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். அசாம் மாநிலம் துப்ரி பகுதியில் நடந்த யோகா நிகழ்ச்சியில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பங்கேற்றார்.

ஒடிசாவின் பாலசோரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பங்கேற்றார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com