ஜிசாட்-என் 2 (GSAT-N2) என்ற இணைய சேவை செயற்கைக் கோள் விரைவில் விண்ணில் செலுத்தப்படும் - இஸ்ரோ தகவல்!

ஜிசாட்-என் 2
ஜிசாட்-என் 2
Published on

இஸ்ரோவால்  தயாரிக்கப்பட்ட,  அதிவேக இணைய சேவையை வழிவகை செய்யும் ஜிசாட்-என் 2 விரைவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் தகவல் தொடர்பு போன்ற செயற்கைக்கோள்களை இஸ்ரோவான இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அவை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, எல்விஎம்-3 ஆகிய ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், இணைய சேவையின் வேகத்தை மேம்படுத்துவதற்காக ஜிசாட்-என் 2 எனும் அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
300 அடி பள்ளத்தில் விழுந்த கார்… ரீல்ஸ் ஆசையில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்… அதிர்ச்சி வீடியோ! 
ஜிசாட்-என் 2

ஜிசாட்-என் 2 செயற்கைக்கோள் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கான்-9 ராக்கெட் மூலம் விரைவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். விண்கலங்கள் அல்லது செயற்கைக்கோள்களின் எடையை பொறுத்துதான் அதற்கான ராக்கெட்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதற்கு ஏற்றவாறு GSAT-2 என்ற செயற்கைக்கோள்  பால்கான்-9 ராக்கெட் மூலம் விரைவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

மேலும் இது குறித்து இஸ்ரோ "ஜிசாட்-என் 2 சுமார் 4,700 கிலோ எடைக் கொண்டது. இதனுடைய ஆயுட்காலம் மொத்தம் 14 ஆண்டுகளாகும். இது குறைந்த பட்சம் 170 கி.மீ. தூரமும், அதிகபட்சம் 36,000 கி.மீ. தொலைவும் கொண்ட புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. நம்மால் (இந்தியா) அதிக பட்சம் 4 ஆயிரம் கிலோ வரையிலான எடை கொண்ட செயற்கைக்கோள்களை மட்டுமே விண்ணில் செலுத்த முடியும். ஆனால், ஜிசாட்-என் 2அதைவிட கூடுதலான எடை கொண்டது. எனவே ஜிசாட்-என் 2 செயற்கைக்கோளை விண்ணில் ஏவ அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து பால்கன்-9 ராக்கெட் மூலம் அடுத்த சில வாரங்களில் ஜிசாட் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் வெற்றி அடைந்தால் இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் அதிவேக இணைய வசதிகளை பெற முடியும். அதாவது, விநாடிக்கு 48 ஜிபி வேகத்தில் பிராட்பேண்ட் சேவை பயனர்களுக்கு கிடைக்கும்,” என தகவல் தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com