green comet
green cometsource:quint

இந்த நாளை மிஸ் பண்ணிடாதீங்க..! மணிக்கு 2.1 லட்சம் கி.மீ வேகம்: விண்வெளியில் ஒரு பச்சை நிற அதிசயம்..!

Published on

மணிக்கு 2.1 லட்சம் கி.மீ. வேகத்தில் சீறிபாயும் பச்சை நிறத்தில் ஜொலிக்கும் வால்மீன் 3I/அட்லஸ் வரும் டிச.19 அன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது என்றும் ஆனால் அதனால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கு அருகில் வந்தாலும் சூரிய–பூமி தூரத்தின் 1.8 மடங்கு, சுமார் 270 மில்லியன் கிலோமீட்டர் என்ற தொலைவில் தான் இருக்கும்.பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரம் ~150 மில்லியன் கிலோமீட்டர் (1 AU) ஆகும் என்பதால் இந்த தூரமானது மிக பெரியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வால்மீன் (Comet) எப்படி உருவாகிறது?

வால்மீன்கள் நமது சூரியக் குடும்பத்தில் உள்ள பனி, கரிமக் கலவை மற்றும் கற்கள் ஆகியவற்றால் உருவாகும் விண்மீன் வகை ஆகும்.சூரியனைச் சுற்றும் வழியில் இருக்கும்போது, இதன் பனியாக இருக்கும் பகுதிகள் சூடாக்கப்பட்டு வாயுக்களாக மாறி வெளிப்படும். இதுதான் வால்மீன்களைப் பார்க்கும் நம் கண்களில் பிரகாசமான “தலை” மற்றும் நீண்ட “வால்” போன்ற தோற்றம் காணக் காரணம்.

சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வால்மீனாக ‘லெம்மன்’ வால்மீன் (Comet Lemmon C/2025 A6) — இது 2025ஆம் ஆண்டு ஆரம்பத்தில் நாசா தரவுகளின் படி கண்டறியப்பட்டது. இந்த வால்மீன்இந்தியாவில் பெங்களூரு வானிலும் தெரிய வந்தது.

இதையடுத்து 19 ந்தேதி மணிக்கு நம் சூரிய மண்டலத்தைக் கடந்து செல்லும் வால்மீன் 3I/அட்லஸ் இதுவரை காணப்பட்டதிலேயே மிகப்பெரிய மற்றும் மிகவும் பழமையான விண்மீன் இடையேயான வால்மீனாக இருக்கலாம் என்றும் அக்டோபர் இறுதியில் சூரியனை நெருங்கியதிலிருந்து, இந்த விண்மீன் முன்பைவிட மேலும் பிரகாசமாகவும் வித்தியாசமான பச்சை நிறத்திலும் ஒளிர்வதாக புதிய தொலைநோக்கிப் படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

குறிப்பாக ஹவாயில் உள்ள ஜெமினி வடக்கு தொலைநோக்கி மூலம் நவ.26 அன்று எடுக்கப்பட்ட காட்சிகள், 3I/அட்லஸ் மிகவும் சுறுசுறுப்பான நிலையில் இருப்பதைக் காட்டுகிறது. சூரியனின் கதிர்வீச்சால் வெப்பமடைந்த வால்மீனின் உள்ளே இருக்கும் பனிக்கட்டி உருகி, டன் கணக்கிலான தூசியுடன் விண்வெளியில் வெளியேறுகிறது. இதன் பிரதான உடலைச் சுற்றி ஒரு பிரகாசமான மேகமூட்டமான வளிமண்டலத்தை உருவாக்கியுள்ளது. விஞ்ஞானிகள் இந்த கோமாவை 4 வடிப்பான்கள் (filters) மூலம் ஆய்வு செய்தபோது, வாயுக்கள் லேசான பச்சை நிற ஒளியை வெளியிடுவதைக் கண்டதாக செய்திகள் கூறுகிறது.

சூரியனை நெருங்குவதற்கு முன்பு இது முதன்முதலில் காணப்பட்டபோது சிவப்பு நிறமாக இருந்து வெப்பத்தில் சூடேறும்போது பச்சை நிற ஒளியை உமிழும் புதிய மூலக்கூறுகளை வெளியிடுகிறது என்றும் வால்மீனில் இருந்து வெளியேறும் வாயுக்களில் உள்ள இரட்டை கார்பன் (C2) என்ற மூலக்கூறே இதற்குக் காரணம் என்றும் ஒளிரும் பச்சை வண்ணம் குறித்து விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

விண்வெளியின் ஆழத்தில் இருந்து நம் சூரிய குடும்பத்திற்குள் நுழைந்த மர்மமான பயணியாக பார்க்கப்படும் 3I/அட்லஸ் வால்மீன் சீறிப் பாய்ந்து பூமிக்கு மிக அருகில் வரவிருக்கும் நிலையில், சூரியனின் வெப்பம் வால்மீனின் உட்புறம் சென்று அடைய தாமதமாகும் என்பதால், இது சூரியனை விட்டு விலகிச்சென்ற பிறகும் கூட, புதிய வேதிப்பொருட்களின் ஆவியாதலைத் தூண்டலாம் அல்லது பெரிய வெடிப்பைத் தூண்டலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இந்தப் பிரகாசமான செயல்பாடு வால்மீன் பொருட்களின் புதிய, கண்கவர் நிகழ்ச்சிகளுக்கு வழிவகுக்கலாம் எனவும் எதிர்பார்க்கின்றனர்.

3I/ATLAS வால்மீன் வானிலய குழுவினரால் ஆராயப்படும் பொருள் மட்டுமே என்றும், நம்மால் கண்களால் பார்ப்பது கடினம் என்றும் யாருக்கும் பாதிப்பு இல்லாமல், வெறும் ஒரு வானியல் விசாரணை நிகழ்வு மட்டுமே ஆகும்.

இதையும் படியுங்கள்:
ஒரு நாளைக்கு ஒரு முட்டை ok... அதற்கு மேல் சாப்பிட்டால் என்ன ஆகும்?
green comet
logo
Kalki Online
kalkionline.com