#JUST IN : தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றார் மகேஷ்குமார் அகர்வால்.!

MaheshKumarAgarwal
MaheshKumarAgarwalSouce:ETVBHARAT
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on

தமிழக காவல்துறை தலைவராக மகேஷ்குமார் அகர்வால் சற்றுமுன் பொறுப்பேற்றார்.

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள மகேஷ் குமார் அகர்வால் செய்தியாளர் சந்திப்பின்போது தமிழ்நாடு மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் வாய்ப்பு தந்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நன்றி தெரிவித்தும் பேட்டி அளித்தார். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை சைபர் கிரைம் காவல்துறைக்கு தமிழ்நாட்டு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் டிஜிபி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ள மகேஷ் குமார் அகர்வால் கேட்டுக்கொண்டார்.

மேலும், தமிழ்நாட்டில் போதை பொருட்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக மக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படும் எனவும் சைபர் கிரைம்களை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புதிய டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் உறுதி கூறியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com