

தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி தலைவர் மு.பன்னீர்செல்வம் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பு ஏற்கும் தளபதி,விஜய் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் எடுத்துக் கொண்டால் கூட "தான் தன்னதனி ஆளு , எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தன் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து தமிழக மக்கள் மீது நம்பிக்கை வைத்து 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி புரட்சிதலைவர் எம.ஜி.ஆரின் வரலாற்று சாதனையே முறியடித்து மாபெரும் புரட்சியை தளபதி விஜய் அவர்கள் ஏற்படுத்தியுள்ளர்.
பணம் பலம் அதிகார பலம் அனைத்தையும் தவிடுபொடி ஆக்கியுள்ளார். மக்கள் நினைத்த மாற்றத்தை கொண்டு வந்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் அக்கட்சி சார்பில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் தமிழக ஐ.என்.டி.யு.சி சார்பில் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.