#IPL 2026 : சிஎஸ்கே-வை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது ‘பஞ்சாப் அணி’..!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது.
Chennai vs Punjab
Chennai vs Punjabimage credit-outlookindia.com
Updated on

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எ.சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு நடக்கும் 7-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் அணியை எதிர்கொண்டது.

ராஜஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே படுதோல்வியை சந்தித்தது.

இன்றைய போட்டிக்கான டாஸ் போட்டதில் பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதனை தொடர்ந்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பத்தில் பொறுமையாகவும் அதன்பின்னர் அதிரடியாகவும் விளையாடி இறுதியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.

இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியை தனது 2-வது வெற்றியையும், சிஎஸ்கே தனது 2-வது தோல்வியையும் பதிவு செய்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com