‘ஜியோ சினிமா’ வில் IPL ஒளிபரப்பு இலவசம்! முகேஷ் அம்பானி கொடுத்தது எத்தனைக் கோடி தெரியுமா?

‘ஜியோ சினிமா’ வில் IPL ஒளிபரப்பு இலவசம்! முகேஷ் அம்பானி கொடுத்தது எத்தனைக் கோடி தெரியுமா?

முகேஷ் அம்பானி தலைமையிலான Viacom 18 தற்போது இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக் இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யப் போகிறது. 

டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி முகேஷ் அம்பானியின் Viacom 18 என்ற நிறுவனம் IPL ஒளிபரப்புவதற்கான உரிமையைப் பெற்றது இதுவே முதல் முறை. 23758 கோடிக்கு செலுத்தி இந்த உரிமையை அவர் பெற்றிருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளாக டிஸ்னி ஹாட்ஸ்டார் ஐபிஎல் ஒளிபரப்புவதற்கான உரிமையைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Viacom 18 அதன் OTT தளங்களான Voot, Jio cinema மற்றும் தொலைக்காட்சி சேனலான Sports 18  ஆகியவற்றில் IPL போட்டிகளை ஒளிபரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான Reliance Projects and Property Management Service Limited-க்கு சொந்தமான Viacom 18 நிறுவனத்தோடு ஜியோ சினிமா OTT இயங்குதளத்தை இணைக்க இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்தி பரவியது. 

இதை அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இரண்டு தளங்களின் இணைப்பு குறித்து அத்தகைய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்று கூறினார். இருப்பினும் முதல் வருடம் மட்டும் ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமாவில் இலவசமாகப் பார்க்கலாம் என்றும், இதை இந்திய பார்வையாளர்களுக்காகவே நாங்கள் பிரத்யேகமாக முடிவு செய்துள்ளோம் என்றும் தெரிவித்திருந்தார். இந்த ஆண்டு இதற்காக எவ்வித கட்டணமும் யாரும் செலுத்த வேண்டாம். இதன் மூலமாக எங்களுக்கு அதிக பயனர்களும் பார்வையாளர்களும் கிடைப்பார்கள் என்று கூறியிருந்தார். 

ஆனால் இதன் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன?

இந்தியா முழுவதும் சுமார் 42 கோடி ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் இருக்கிறார்கள். இதில் தினசரி 5 கோடி நபர்கள் ஸ்மார்ட்போன் வாயிலாக ஐபிஎல் பார்க்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். ஐபிஎல் நடக்கும் 45 நாட்களுக்கும் தினசரி 1GB Data (3.89 ரூபாய்) பயன்படுத்துகிறார்கள் என்று எடுத்துக் கொள்வோம். 

5× 3.89 × 45 = 875 கோடி இவர்களுக்கு இன்டர்நெட் பயன்படுத்துவதால் மட்டுமே கிடைக்கிறது. இதை இலவசமாக கொடுக்கிறார்கள் என்பதால் மேலும் அதிகமான பார்வையாளர்கள் இவர்களுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் விளம்பர வருவாய் என்று எடுத்துக் கொண்டால், 1000 Impression-களுக்கு 200 ரூபாய் கட்டணமாக விதித்தாலும், மொத்த ஐபிஎல் போட்டிகளுக்கும் 750 பில்லியன் இம்ப்ரசன் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். இதிலிருந்து 15000 கோடி வரை அவர்களுக்குக் கிடைக்கும். இது தவிர ரெவென்யூ ஷேரிங் முறையிலும் இவர்களுக்கு பணம் கிடைக்கும். ஆனால், என்னதான் கணக்கீடுகள் செய்தாலும் கிட்டத்தட்ட 2000 முதல் 3000 கோடி வரை இவர்களுக்கு இழப்பு ஏற்படத்தான் வாய்ப்புள்ளது.

இது இந்த ஒரு ஆண்டுக்கு மட்டும் தான். இலவசமாக வழங்குவதால் அதிகமான புதிய பயனர்கள் ஜியோ இணைப்புக்கு மாற வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு இதை பார்ப்பதற்கு அவர்கள் கட்டணம் நிர்ணயித்தால், புதிய பயனர்களும் இணைந்திருப்பார்கள் அதேசமயம் வருவாயும் நினைத்ததை விட பன்மடங்கு உயரும் என்பதே ஜியோ நிறுவனத்தின் மாஸ்டர் பிளான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com