இஸ்ரேலை தாக்க நவீன ராட்சச ஆயுதங்களை புதிதாக இறக்கப்போவதாக இஸ்லாமிய நாடுகளுக்கு தகவல் தெரிவித்துள்ளது ஈரான்.
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் இந்தப் போரை தொடங்கியது. இருதரப்பினருக்கும் இடையே நடக்கும் இந்தப் போரில் அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர். பஞ்சம், நோயினால் மறுபக்கம் உயிர் சேதம் நிகழ்கிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பையும் எதிர்த்து இஸ்ரேல், லெபனான் மற்றும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
சமீபத்தில் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலில் ஈரானின் ரேடார் சிஸ்டங்கள் எல்லாம் அழிக்கப்பட்டது. இதனால் ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.
முதலில் ஈரான் அமைதியான முறையில் காசாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தது. ஆனால், இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால், முதல்முறை ஈரான் நேரடி தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து இப்போது இரண்டாவது முறை நேரடி தாக்குதலில் ஈடப்படவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
சமீபத்தில் ஈரான் மீது இஸ்ரேல் மூன்று தொடர் தாக்குதலை நடத்தியது. 100 க்கும் மேற்பட்ட விமானங்களை களமிறக்கி இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. இதில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது. மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது.
ஈரானின் மக்கள் வசிக்கும் இடங்களை குறிவைக்காமல் ராணுவத்தினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. மேலும் அணு மற்றும் எண்ணெய் உற்பத்தி இடங்களையும் குறிவைத்து தாக்கியது.
இதற்கு பதில்தாக்குதலை நடத்த ஈரான் திட்டமிட்டு வருகிறது. அதுவும் மிகப்பெரிய தாக்குதலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஈரான் நாட்டு அரசு தனது ராணுவ வீரர்களிடம் போருக்கு தயாராகும்படி உத்தரவிட்டு உள்ளதாம். போர் தொடர்பாக முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாம். கடந்த தாக்குதலில் "Fattah 1 மற்றும் 2" ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தியது. முதல்முறையாக இந்த இரண்டு ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தி உள்ளது.
இவற்றை மீண்டும் பயன்படுத்தவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
ஃபத்தாஹ் 2 என்ற ஏவுகணை கடந்த நவம்பரில் கொண்டு வரப்பட்டது. 350-450 kg எடை கொண்டது இது. 1400 கிலோ மீட்டர் பயணித்து தாக்க கூடியது. ஒலியின் வேகத்தை விட 13 மடங்கு அதிக வேகத்தில் இது செல்ல கூடியது.
ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்பது ஹைப்பர்சோனிக் வேகத்தில் பயணிக்கக்கூடிய ஒரு ஆயுதமாகும், இது ஒலியின் வேகத்தை விட 5 முதல் 25 மடங்கு வேகத்தில் செல்லும். இல்லையென்றால் 1 to 5 மைல்கல் நொடிக்கு போகக்கூடிய (1.6 to 8.0 km/s) வேகத்தில் செல்லும்.
ஆகையால், ஈரான் இப்போது மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டு வருகிறது என்பது மட்டும் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் எப்போது எப்படி வேண்டுமென்றாலும் நடக்கலாம்.