#BREAKING : இந்தியர்கள் இருந்த ரசாயன கப்பல் மீது ஈரான் தாக்குதல்..! 12 இந்தியர்களின் நிலை என்ன?

Iran attacks Togo-flagged chemical tanker with 12 Indian crew onboard
Iran attacks Togo-flagged chemical tanker with 12 Indian crew onboardimage source:TOI
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

டோகோ நாட்டுக் கொடியுடன் சென்ற ரசாயனக் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. அதில் 12 இந்தியப் பணியாளர்கள் இருந்தனர். அந்த ரசாயன எண்ணெய்க் கப்பலின் பெயர் எம்டி சிரோன்(MT Chiron) ஆகும்.ஓமானில் உள்ள ஷினாஸ் (Shinas) துறைமுகத்தின் வெளி எல்லைக்கு அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மற்ற கப்பல்களுடன் பயணித்துக் கொண்டிருந்த இந்தக் கப்பலை ஈரானிய கடலோரக் காவல் படை வழிமறித்து எச்சரிக்கைக்காக துப்பாக்கி சூடு நடத்தியது. இத்தாக்குதலில் இந்தியப் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஓமன் நாட்டின் ஷினாஸ் துறைமுகத்திற்கு வெளியே பிற கப்பல்களுடன் சென்று கொண்டிருந்த பொழுது இந்தக் கப்பல் இடைமறிக்கப்பட்டு எச்சரிக்கை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. கப்பலில் 12 இந்தியர்கள் பணி புரிந்தனர். இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நடந்துள்ளது. இதே காலகட்டத்தில் ஈரானால் கடத்தப்பட்ட அல்லது தாக்கப்பட்ட பிற கப்பல்கள்(MKD Vyom, Skylight) மூலமாகவும் அந்த பிராந்தியத்தில் கடல்சார் வர்த்தகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

logo
Kalki Online
kalkionline.com