ஹிஜாபை துறந்த ஈரானிய செஸ் வீராங்கனை: ஸ்பெயின் நாட்டு குடியுரிமை பெற்றார்!

ஈரான் செஸ் வீராங்கனை சாரா கதீம்
ஈரான் செஸ் வீராங்கனை சாரா கதீம்
Published on

ரான் நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீராங்கனை சாரா கதீம் கடந்த ஆண்டு கஜகஸ்தானில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஹிஜாப் அணியாமல் கலந்து கொண்டார். இதனையடுத்து அவருக்கு கடும் எதிர்ந்த நிலையில் செஸ் வீராங்கனை சாரா கதீம் தற்போது ஸ்பெயின் நாட்டு குடியுரிமையைப் பெற்றுள்ளார்.

இஸ்லாமிய சட்டங்களைப் பின்பற்றும் ஈரான் நாட்டில் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணியவேண்டும். பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த iran mahsa amini (22) என்பவர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார்.

அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டினர். அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட மாஷா கோமா நிலைக்கு சென்றவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி உயிரிழந்தார். மாஷா அமினி உயிரிழப்பு ஈரான் நாட்டில் பெண்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான பெண்கள், ஈரான் அரசு பெண்கள் மீது விதித்துள்ள ஆடை கட்டுப்பாடு மற்றும் கட்டாயம் ஹிஜாப் அணியும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் போராட்டத்தில் இறங்கினார்கள். தற்போதுவரை ஹிஜாப் அணிவதற்கு எதிரான போராட்டம் ஈரானில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இளம் செஸ் வீராங்கனையான சாரா கதீம் கலந்துகொண்டார். இதனையடுத்து அப்போது கஜகஸ்தானில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஹிஜாப் அணியாமல் கலந்து கொண்டு தன்னுடைய எதிப்பை வெளிப்படுத்தினார். சாராவின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அதன் காரணமாக அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது ஈரான் அரசு. அதன்பின், உறவினர்களின் ஆலோசனையின்படி அவர் ஸ்பெயின் நாட்டில் குடியேறினார். அவரது சூழலை கருத்தில் கொண்டு சிறப்பு பிரிவின் கீழ் தற்போது அவருக்கு ஸ்பெயின் நாட்டு அரசு சாரா கதீமுக்கு அந்நாட்டு குடியுரிமை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com