#BIG NEWS : ஹோர்முஸ் ஜலசந்தியை திறந்தது ஈரான்..!!

Strait of Hormuz
Hormuz AI
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

லெபனானில் தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால் , ஹோர்முஸ் ஜலசந்தியை வர்த்தக நடவடிக்கைகளுக்காக, வணிக கப்பல்களுக்கு மட்டும் திறக்கப்படுவதாக ஈரானின் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார். வர்த்தக கப்பல்கள் ஈரானிய அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி ஒருங்கிணைக்கப்பட்ட பாதையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கை லெபனானில் போர் நிறுத்தம் நீடிக்கும் நாள் வரை மட்டுமே அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டிற்கு இடையில் 10 நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. போரிலிருந்து இஸ்ரேல் ராணுவம் பின்வாங்காது என்று கூறினாலும் , தற்போது தாக்குதல் நின்றுள்ளதால் ஈரான் , அமெரிக்கா உடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு இணங்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஈரானின் இந்த முடிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாராட்டி தனது வலைதளத்தில் எழுதியுள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளதால் பல நாடுகளில் பங்குச் சந்தைகள் சரிவிலிருந்து மீண்டு வருகின்றன. எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளும் உயரத் தொடங்கியுள்ளன.

logo
Kalki Online
kalkionline.com