உலக கால்பந்து போட்டியில் தோல்வி; ஈரானில் கொண்டாட்டம்!

உலக கால்பந்து போட்டியில் தோல்வி; ஈரானில் கொண்டாட்டம்!
Published on

கத்தாரில் நடக்கும் உலக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முந்தினம் அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் விளையாடி தோல்வியுற்றது. இத்தோல்வியை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருவது, உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

 ஈரானில், பெண்கள் ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்கியதர்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருகிறது. அங்கு கடந்த செப்டம்பரில் மாஷா அமினி என்ற இளம்பெண், சரியாக ஹிஜாப் அணியாமல் பொது இடத்துக்கு வந்ததர்காக கைது செய்யப்பட்டு, காவல்நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இதையடுத்து அந்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு, தடியடி போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதில், கடந்த 2 மாதங்களில் மட்டுமே 448 பேர் கொல்லப்பட்டதாக நார்வேயில் செயல்படும் மனித உரிமை குழு நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் அணி தோற்றதை, ஈரான் மக்கள்  பட்டாசுகள் வெடித்தும், கார் ஹார்ன்களை தொடர்ச்சியாக அடித்தும், சாலைகளில் நடனமாடியும், பாட்டுப் பாடியும் கொண்டாடி வருகிறார்கள். இது உலகளவில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 'அதற்குக் காரணம் ஈரான் கால்பந்து அணியையும் ஈரான் அடக்குமுறை அரசின் ஒரு அங்கமாகக் கருதுவதால்தான் என்கிறார்கள்.

காவல்நிலையத்தில் இறந்த மாஷா அமினியின் சொந்த ஊரான சாக்கெஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த கொண்டாட்டம் களை கட்டி நடந்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com