Donald Trump
Donald Trump

ட்ரம்பை சுட்டது ஈரான் - அமெரிக்க தூதரகம்!

Published on

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இதனையடுத்து இது ஈரான் சதி என்று அமெரிக்கா தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.  இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கடந்த 14ம் தேதி பென் சில்வேனியா மாகாணத்தின் பட்லர் நகரில் டிரம்ப் பிரசாரம் செய்தார். அப்போது திடீரென்று மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ட்ரம்பின் காதை உரசி தோட்டா சென்றது. இதனால், நூழிலையில் அவர் உயிர் தப்பினார்.

இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டிரம்பை கொலை செய்ய ஈரானின் சதித்திட்டம் குறித்து அமெரிக்காவிற்கு உளவுத்துறை தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றது.

அந்த சமயத்தில் அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் ட்ரம்ப். இந்தக் காரணத்தினால்தான், அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று சில வாரங்களுக்கு முன்பு இந்த தகவல் கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் பேசினார்.

"கடந்த நிர்வாகத்தில் இருந்து, முன்னாள் அதிபர் டிரம்ப் நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக ஈரானிய அச்சுறுத்தல்களை பல ஆண்டுகளாக கண்காணித்து வருகிறோம். காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் ஈரானின் முயற்சிகளால் அச்சுறுத்தல்கள் உள்ளன." என்றார். மேலும் மற்றொரு தகவலும் கிடைத்துள்ளது. அதாவது ட்ரம்ப்பை சுட்ட கும்பலுக்கும்  மற்ற வெளிநாடுகளுக்கும் எந்த தொடர்பும் பகையும் இல்லை.

இதையும் படியுங்கள்:
விருந்தினருக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த 2 கோடி மதிப்பிலான வாட்ச்! 
Donald Trump

ஆனால், அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுக்கு ஈரான் முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, டொனால்ட் ட்ர்ம்பை சுட்ட கும்பலில் சிக்கியவர்களின் தகவல்கள் பகீர் கிளப்பும் வகையில் இருக்கிறது. இதனையடுத்து இப்போது அமெரிக்க தூதரகத்தின் இந்த குற்றச்சாட்டு மேலும் சந்தேகங்களை எழுப்புகின்றது.

logo
Kalki Online
kalkionline.com