சமீபத்தில் ஈரானின் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜாவித் ஜாஃப்ரி தற்போது திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்திற்கு உதவியாக ஹிஸ்புல்லா இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கம் ஈரான் நாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த இரு அமைப்புகளையும் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத பட்டியலில் இணைத்துள்ளனர்.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் உசைன் அமீர் அப்துல்லாஹியன் உட்பட சில முக்கிய நபர்கள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய அதிபர் உட்பட 8 பேர் பலியாகினர். ஈரான் தனது அனுபவமிக்க அலி பகேரியை தற்காலிக வெளியுறவு அமைச்சராக நியமித்தது. அதேபோல், துணை அதிபராக இருந்த முகமது மொக்பர் தேர்தல் நடைபெறும் வரை அதிபராக இருக்கப் பதவியேற்றார். பின் தேர்தல் நடைபெற்றது. அதில் வெற்றபெற்ற மசூத் பிசிஷ்கியான் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஈரானின் துணை அதிபராக ஜாவித் ஜாஃப்ரி பதவியேற்றார்.
பதவியேற்பு விழாவில் ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் கலந்துக்கொண்டார். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியையும் அவர் சந்தித்து பேசினார். இதனையடுத்து ஈரான் தலைநகர் தெக்ரானில் உள்ள தனது வீட்டில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். இதில் அவரும் அவரது மெய்க்காப்பாளர்களில் ஒருவரும் வீர மரணம் அடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இப்படியான சூழல் நிலவிவரும் நிலையில், துணை அதிபரான ஜாவித் ஜாஃப்ரி திடீரென ராஜினாமா செய்வதாக தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தான் முன்மொழிந்த 19 உறுப்பினர்களை கொண்ட புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பாக அவர் அதிருப்தி அடைந்து, ராஜினாமா செய்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தெரியவரவில்லை.