ஈரானின் முதல் தாக்குதல்… எச்சரித்த இஸ்ரேல்… நழுவிய அமெரிக்கா!

Isreal, Iran War
Isreal, Iran War

நேற்று முன்தினம் இஸ்ரேல் மீது ஈரான் பெரிய தாக்குதலை நடத்தியதால், இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. மேலும் அமெரிக்கா இதனைப் பற்றிய முக்கிய அறிவிப்பை இஸ்ரேலிடம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாகக் கூறிவந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பல நூறு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இஸ்ரேல் மீது வீசியது. ஈரானின் இந்த நேரடி தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. இதற்கு ஈரான் பெரிய விலையைக் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளதால் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

இதுதொடர்பாக ஈரானின் ஐநா தூதர் கூறுகையில், “இஸ்ரேல் டமாஸ்கஸ் பகுதியில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகதான் நாங்கள் இஸ்ரேலைத் தாக்கியிருக்கிறோம். எங்களை நாங்கள் தற்காத்துக்கொள்வதற்கான உரிமை உள்ளது. இஸ்ரேலின் அத்துமீறல் காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தியுள்ளோம்.”

அதேபோல் இஸ்ரேலின் ஐநா பிரதிநிதி கூறியதாவது, “ஈரான் நடத்திய தாக்குதலை எங்களால் ஏற்கவே முடியாது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஈரான் மீது அனைத்து விதமான தடைகளையும் விதிக்க வேண்டும்.“ என்றார். அதேபோல் ஈரானின் இந்தத் தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கடுமையாகக் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

Iran attack on Israel
Iran attack on Israel

இதுகுறித்து ஈரான் மேலும் கூறியுள்ளது. அதாவது இஸ்ரேல், ஈரான் தூதகரத்தில் நடத்திய தாக்குதலுக்கே பதிலடி கொடுக்கப்பட்டது. இத்துடன் இது முடிந்துவிட்டது. ஒருவேளை மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அதற்கான பதில் தாக்குதல் இதைவிட மிகவும் கடுமையாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது. ஆனால், இஸ்ரேலும் பதில் தாக்குதலுக்கு தயாராக இருக்கும்படி கூறியதால் தாக்குதல் தொடரும் என்றே எதிர்பாக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
‘கொலைகளுக்கு பின்னணியில் இந்தியா’ – குற்றம்சாட்டிய நாடுகள்! பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெய்சங்கர்!
Isreal, Iran War

இதனையடுத்து அமெரிக்கா தங்கள் பக்கம் உள்ள கருத்தை இஸ்ரேலிடம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என்று கூறியதையடுத்து, அமெரிக்கா அந்த தாக்குதலுக்கு எந்த ஆதரவையும் வழங்காது என்று கூறியுள்ளது. இதுபோன்ற செயல்களை அமெரிக்கா ஆதரிக்காது என்றும் கூறியுள்ளது.

இஸ்ரேல் மீது பல நூறு ஏவுகணைகள் ஏவப்பட்டாலும், அவையனைத்தும் நாட்டின் எல்லைக்குள் நுழையும் போதே அழிக்கப்பட்டுவிட்டதால், எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com