'ஈரானுக்கு எதிராகச் செயல்பட்டால் இஸ்ரேல் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும்‘ ஈரான் அதிபர் எச்சரிக்கை!

'ஈரானுக்கு எதிராகச் செயல்பட்டால் இஸ்ரேல் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும்‘ ஈரான் அதிபர் எச்சரிக்கை!
Published on

ஸ்ரேல் அதிபர் நேதன்யாகு சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இன்றைய ஈரானை நாஜி காலத்தில் இருந்த ஜெர்மனியுடன் ஒப்பிட்டுப் பேசியதோடு, யூத மக்களுக்கு ஈரான் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டுப் பேசியது ஈரான் அரசை பெரும் கோபத்துக்கு உள்ளாக்கி இருந்தது.

அதையடுத்து, ஈரானின் ராணுவ தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி பேசியபோது, “இஸ்ரேல் நமது நாட்டுக்கு எதிராக எடுக்கும் எந்த சிறிய நடவடிக்கைகளுக்குக் கூட கடுமையான பதிலடி கிடைக்கும். பிராந்தியத்தின் அமைதியை வழி நடத்தும் நட்பு நாடுகளுடன் எங்கள் படை எப்போதும் நட்புடன் இருக்கும். மத்திய கிழக்கு பகுதியிலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும். ஈரானின் அணு ஆயுத மற்றும் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. ஈரானின், ராணுவப் படைகள் மத்தியக் கிழக்கு பகுதி வரை விரிந்து பரவியுள்ளன. லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹிஜ்புல்லா பயங்கரவாத குழுக்களுக்கு ஈரானின் ஆதரவும் காணப்படுகிறது‘’ என்று அவர் பேசி உள்ளது உலக நாடுகளிடையே உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com