திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஆன்மீக சுற்றுலா: ஐ.ஆர்.சி.டி.சி அறிவிப்பு!

திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஆன்மீக சுற்றுலா: ஐ.ஆர்.சி.டி.சி அறிவிப்பு!
Published on

காசி, கயா போன்ற புனித தளங்களுக்கு பக்தர்களை விமானம் மூலம் அழைத்துச் செல்லும் புதிய திட்டத்தை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகமான ஐ. ஆர்.சி.டி.சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.ஆர்.சி.டி.சி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், இந்திய ரயில்வே ஆணையம் ஐ.ஆர்.சி.டி.சியின் ஆன்மிக சுற்றுலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு ஆன்மிக சுற்றுலாக்களை இந்திய ரயில்கள் மூலம் மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், தற்போது புதிய முயற்சியாக திருச்சி விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமான சேவை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் முதல் முயற்சியாக ஆன்மிக சுற்றுலாவை அறிவித்துள்ளது. குறிப்பாக புனித தளங்களான காசி, கயா, அலகாபாத், அயோத்தி ஆகிய ஆன்மிக தளங்களை ஏழு நாட்கள் சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு 40 ஆயிரத்தி 500 ரூபாய் கட்டணம் நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சார்தாம் யாத்திரை, கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்திரி, ரிஷிகேஷ், ஹரித்துவார் ஆகிய தளங்களை சுற்றிப் பார்க்க 13 நாள் பயணத்திற்கு நபர் ஒருவருக்கு 68 ஆயிரத்து 150 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த சிறப்பு சுற்றுலாவிற்காக பெறப்படும் கட்டணத்தில் இருந்து விமான கட்டணம், உள்ளூர் போக்குவரத்து, தங்கும் இடம், உணவு, சுற்றுலா மேலாளர், பயணக் காப்பீடு, ஜி.எஸ்.டி ஆகியவையும் உள்ளடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 11ம் தேதி தொடங்கப்படவுள்ள காசி, கயா யாத்திரை காலை 8:30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்திலிருந்து புறப்படும். பிறகு ஆகஸ்ட் 17ஆம் தேதி மீண்டும் திருச்சியை வந்து அடையும் வகையில் பயணம் அமைக்கப்பட்டுள்ளது.

கேதார்நாத், பத்ரிநாத் யாத்திரையை உள்ளடக்கிய 13 நாள் பயணம் அக்டோபர் 27ஆம் தேதி திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மீண்டும் நவம்பர் 8 தேதி திருச்சி விமான நிலையத்தை வந்தடையும் வகையில் பயணம் வகுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலும் தகவலுக்கு ஐ ஆர் சி டி சி இணையதள முகவரியான www.irctctourism.com மூலமாகவும் மற்றும் திருச்சி 82 27 93 20 70, மதுரை 82 87 93 19 77, சென்னை 90031 4 0682 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com