நடிகை லாவண்யா திரிபாதி இந்த பிரபலத்தை மணக்க போகிறாரா?

நடிகை லாவண்யா திரிபாதி இந்த பிரபலத்தை மணக்க போகிறாரா?

தெலுங்கு சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் லாவண்யா திரிபாதி. இவருக்கு தெலுங்கில் அமைந்த முதல் படமே நவீன் சந்திராவுடன் ‘அந்தால ராட்சசி’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் ஹனுராகவபுடி இயக்கியிருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆஃபீஸில் நல்ல வசூலை பெற்றது.

தமிழில் சசிகுமாரின், ‘பிரம்மன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. தொடர்ந்து, ‘மாயவன்’ படத்தில் நடித்தார். இப்போது அதர்வா ஜோடியாக ‘தணல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் லாவண்யா, இளம் ஹீரோ வருண் தேஜை காதலித்து வருவதாகக் கூறப்பட்டு வருகிறது. இருவரும் ‘அந்தாரிக்‌ஷம்’ என்ற படத்தில் நடித்த போது காதலில் விழுந்ததாகச் செய்திகள் வெளியாயின.

இந்த படத்துக்கு பிறகு நடிகை லாவண்யா திரிபாதிக்கு அடித்தது அதிர்ஷ்டம் அடுத்தடுத்து இவர்க்கு படவாய்ப்புகள் ‘தூசுகெல்தா, பலே பலே மகோடிவோய், சோகடே சின்னி நயனா, லச்சிம்தேவிகி ஓ லெக்குந்தி, ஸ்ரீரஸ்து சுபமஸ்து. மிஸ்டர், ராதா, யுத்தம் சரணம், வுன்னாதி ஒக்கடே ஜிந்தகி, இன்டெலிஜென்ட், அந்தரிக்ஷம்9000 KMPH, அர்ஜுன் சுரவரம், A1 எக்ஸ்பிரஸ், சாவு கபுரு சல்லகா’ என குவிந்தது.லாவண்யா திரிபாதி நடித்து சமீபத்தில் ரிலீஸான தெலுங்கு படம் ‘ஹேப்பி பர்த்டே’. இந்த படத்தை இயக்குநர் ரித்தேஷ் ராணா இயக்கியிருந்தார்.

ஏற்கனவே, நடிகை லாவண்யா திரிபாதியும், பிரபல தெலுங்கு நடிகர் வருண்தேஜ்ஜும் காதலித்து வருவதாக டோலிவுட்டில் செய்திகள் கசிந்து வந்தது . தற்போது, இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் வருகிற ஜூன் மாதம் நடைபெறவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கிறது என்கிறார்கள். இதை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை. நடிகர் வருண் தேஜ், சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com