நடிகை சமந்தாவின் படம் ரூ.20 கோடிக்கு மேல் நஷ்டமா?
சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கடந்த 14ம் தேதி வெளியானது. 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 3டி தொழில்நுட்பத்தில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
கடந்த 14ம் தேதி வெளியான படம், " சாகுந்தலம்" சமந்தாவின் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. படக்குழுவும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று புரமோஷன் செய்தது. ஆனாலும் ‘சாகுந்தலம்’ படம் அதிக வரவேற்பை பெறவில்லை. குணசேகர் இயக்கி இருந்த இந்தப் படத்தை அவருடன் சேர்ந்து தில் ராஜூவும் தயாரித்திருந்தார். ரூ.80 கோடி செலவில் படம் உருவானதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படம் ஏற்கனவே இரண்டு முறை ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சாகுந்தலம் படத்துக்கு முதல் நாளிலேயே எதிர்பார்த்த ஓபனிங் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. மேக்கிங்கில் ஃபேண்டசியாக இருந்தாலும் கதை, திரைக்கதை ரொம்பவே போர் அடித்ததாக ரசிகர்கள் நெகட்டிவான விமர்சனம் தெரிவித்திருந்தனர்.இதனால் 80 கோடி பட்ஜெட்டில் உருவான சாகுந்தலம், முதல் வாரம் முடிவில் 10 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது.

அந்த அளவுக்கு படம் படுதோல்வி அடைந்துள்ளது. இப்படம் வெளியாகி 8 நாட்கள் கடந்த நிலையில் வெறும் 10 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமின்றி தற்போது தியேட்டர் occupancy மிக மிக குறைவாக இருப்பதால் படம் தியேட்டர்களில் இருந்து நீக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.
ரிலீஸுக்கு முன்பே டிஜிட்டல் உரிமையை ரூ.35 கோடிக்கு விற்றுவிட்டதாகவும் சாட்டிலைட் உரிமைக்கு ரூ.15 கோடி கேட்டதால், யாரும் வாங்கவில்லை என்றும்கூறப்படுகிறது. இப்போது சாட்டிலைட் உரிமையை குறைந்த விலையிலேயே கேட்பதால் ரூ.20 கோடிக்கு மேல் நஷ்டத்தைச் சந்திக்கும் என்று கூறப்படுகிறது