ரெசிஷன் பிரச்சனையில் ஜெர்மனி: ரஷ்யா தான் காரணமா?

ரெசிஷன்  பிரச்சனையில் ஜெர்மனி: ரஷ்யா தான் காரணமா?

பிரிட்டன் பொருளாதாரம் ஏற்கனவே மோசமான நிலையில் இருக்கும் நிலையில் ஜெர்மனியும் தற்போது ரெசிஷன் பிரச்சனையில் உள்ளது

ஐரோப்பிய யூனியனில் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் ஜெர்மனி அரசின், புள்ளியியல் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட தரவுகள் படி அந்நாட்டின் பொருளாதாரம் எதிர்மறையான வளர்ச்சி அதாவது மைனஸ் அளவில் ஜிடிபி அளவீட்டை பதிவு செய்துள்ளது

ஜெர்மனி நாட்டின் ஜிடிபி டிசம்பர் காலாண்டிலும், மார்ச் காலாண்டிலும் மைனஸ் அளவில் உள்ளது.தொடர்ந்து 2 காலாண்டாக அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் நிலையில் சென்றால் மட்டுமே ரெசிஷன் என அறிவிக்கப்படும். ஜெர்மனி நாட்டில் ஒரு குடும்பம் வாங்கும் பொருட்களின் அளவும் டிசம்பர் காலாண்டுக்கும், மார்ச் காலாண்டுக்கும் 1.2 சதவீதம் குறைந்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் முதல் 3 மாதத்தில் ஜெர்மனி நாட்டின் பொருளாதாரம் -0.3 சதவீதம் சரிந்துள்ளது. இதன் மூலம் ஜெர்மனி பொருளாதாரம் அதிகாரப்பூர்வமாக ரெசிஷனுக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. 2022 ஆம் ஆண்டின் கடைசி 3 மாதத்தில் ஜெர்மனி பொருளாதாரம் -0.5 சதவீதமாக இருந்து. ஜெர்மனி நாட்டின் பொருளாதார சரிவுக்கு மிக முக்கியமான காரணம் ரஷ்யா-வில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு வருவது தடைபெற்றதால் மட்டுமே.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக G7 நாடுகளின் கூட்டாக ஜெர்மனியும் ரஷ்யா மீது அதிகப்படியான தடைகளை விதித்தது. இதனால் ரஷ்யாவில் இருந்து பைப் மூலம் பெறப்பட்ட கச்சா எண்ணெய், எரிவாயு முதல் அனைத்தும் தடைபெற்றது.

ஜெர்மனிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவில் இருந்து எரிபொருள் மொத்தமாக தடை செய்யப்பட்டது. இதனால் ஜெர்மனி நாட்டின் அனைத்து விதமான எரிபொருளின் விலை அதிகரித்துள்ளது, பணவீக்கமும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக தான் ஏப்ரல் மாதம் ஜெர்மனி நாட்டின் பணவீக்கம் அதிகப்படியாக 7.2 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com