மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்டால் ஊக்கத்தொகையா ? அதுவும் இந்தியாவிலா?

மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்டால் ஊக்கத்தொகையா ? அதுவும் இந்தியாவிலா?

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் மக்கள்தொகை குறைந்து வருவதால் கவலையடைந்த மகேஸ்வரி சமூகம் மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு ரூ.50,000 FD வழங்க முடிவு செய்துள்ளது.

மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்டால் அந்த தம்பதிகளுக்கு ஊக்கத்தொகை தருகிறார்கள் என்பதை நம்ப முடிகிறதா? அது வேறு எங்கும் இல்லை நம்ம இந்தியாவில் தான். மக்கள் தொகை பெருக்கத்தில் உலகில் இரண்டாவது இடத்தில உள்ள இந்தியாவில் தான் என்பது ஒரு ஆச்சர்யமான விஷயமாகத் தான் பார்க்க படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் தான் இந்த ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்ய பட்டது என்பது அனைவருக்குமான ஆச்சர்ய தகவல்.

சமூகத்தில் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் கொள்கையை ஊக்குவிக்க இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராஜஸ்தானின் புஷ்கரில் நடைபெற்ற சேவா சதனின் பொதுக் கூட்டத்திலும் இது தொடர்பாக பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

மக்கள்தொகை குறைந்து வருவதால் கவலையடைந்த மகேஸ்வரி சமூகம் மூன்றாவது குழந்தையைப் பெற்ற தம்பதிகளுக்கு ரூ. 50,000 FD வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கு முன், மூன்றாவது குழந்தை மகளாக இருக்கும்போது மட்டுமே வழங்கப்பட்ட இந்த வசதி, தற்போது பாலின வேறுபாடின்றி எந்த குழந்தையாக இருந்தாலும் வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

புஷ்கரில் நடந்த கூட்டத்தில், திருமணம் செய்து கொள்ள சமூகத்தில் ஆண், பெண் யாரும் இல்லை என விவாதிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் சமூகம் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளது. அதனால்தான் மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் குடும்பத்திற்கு மரியாதை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர நாசிக், ஜெகநாத்புரி, அயோத்தி ஆகிய நகரங்களில் விரைவில் கட்டிடங்கள் கட்டவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புஷ்கரில் ஆண்டு பொதுக்கூட்டம் ராம்குமார்ஜி பூதாதா தலைமையில் நடைபெற்றது. ராஜஸ்தானின் தொலைதூர மாநிலங்கள் உட்பட அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சமுதாய மக்கள் இதில் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com