ஜோஷிமத் கட்டடங்களில் சிவப்பு நிற பெருக்கல் குறி!

இந்திய வரைபடத்திலிருந்து காணாமல் போக போகிறதா ஜோஷிமத்?
ஜோஷிமத்
ஜோஷிமத்
Published on

உத்தரகாண்டின் ஜோஷிமத் நகரமே வசிக்க பாதுகாப்பற்றது என்பதை குறிக்கும் வகையில் அங்குள்ள கட்டடங்களில் அதிகாரிகள் சிவப்பு நிற பெருக்கல் குறியை வரைந்துள்ளனர்.

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டத்தில் , இமயமலையில் 6150 அடி உயரத்தில் அமைந்துள்ள எழில் கொஞ்சும் நகரம். இமயமலையில் மலை ஏறும் குழுவினர்களுக்கும், பத்ரிநாத் கோயில் புனித யாத்திரை செய்பவர்களுக்கும் ஜோஷிமத் நுழை வாயிலாக அமைந்துள்ளது எனது அதன் தனிச்சிறப்பு.

உத்தரகண்டில் உள்ள ஜோஷிமத் நகரத்தின் பகுதிகள் மண்ணில் புதைந்து வருவதால், வீடுகள், கட்டடங்கள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.

அங்கு மேலும் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 678ஆக உயர்ந்துள்ளது.

அங்கிருந்து இதுவரை 82 குடும்பங்கள் நகரின் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் 570க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.

அங்கு வசிப்போர் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து சுமார் 60 குடும்பங்கள் தற்காலிக மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாக சமோலி மாவட்ட மாஜிஸ்திரேட் ஹிமான்ஷி குரானா தெரிவித்துள்ளார்.

வாழ்வதற்கு பாதுகாப்பாற்ற 200க்கம் மேற்பட்ட வீடுகளில் மாவட்ட நிர்வாகம் சிவப்பு குறியிட்டுள்ளது.

அந்த வீடுகளில் வசிப்பவர்களை தற்காலிக நிவாரண முகாம்கள் அல்லது வாடகைக்கு வேறு இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக 16 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர பொதுமக்களை தங்க வைக்க கூடுதலாக 19 ஹோட்டல்கள், விருந்தினர் இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நகருக்கு வெளியே பீபல்கோடி பகுதியிலும் பொதுமக்களை தங்க வைப்பதற்கான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்திய வரை படத்திலிருந்து காணாமல் போக போகிறதா ஜோஷிமத்?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com