ஐநாவின் நிரந்தர உறுப்பினராகிறதா பாலஸ்தீனம்? நாளை வாக்கெடுப்பு!

Palestine flag
Palestine flag

ஐநாவின் நிரந்தர உறுப்பினராக பாலஸ்தீனம் முயற்சித்து வருகிறது. அந்தவகையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒருவேளை, வாக்கெடுப்பு முடிவு பாலஸ்தீனத்திற்கு சாதகமாக அமைந்தது என்றால், உலக நாடுகள் மத்தியில் பாலஸ்தீனத்தின் குரல் வலிமையாக இருக்கும்.

இஸ்ரேல் காசா போரில் காசாவின் ஏராளமான பொதுமக்கள் பலியாகினர். பலர் அங்கிருந்து வெளியேறி ரபா நகரில் தஞ்சமடைந்துள்ளனர். 7 மாதங்களாக நடந்து வரும் போரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் இணைந்து முன்மொழிந்தன. இதனை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. தாங்கள் போர் நிறுத்தத்திற்கு தயார் என தெரிவித்து உள்ளது.

ஆனால், ஹமாஸ் இஸ்ரேலுக்கு சில நிபந்தனைகளை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால், இஸ்ரேல் அந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே போர் நிறுத்தம் உறுதியாகும். அதேபோல், தற்போது ராஃபா எல்லையில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது. இங்கு 15 லட்சம் பாலஸ்தீனர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், இஸ்ரேலும் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்பது உலக நாடுகளின் கோரிக்கையாகும்.

சில நாட்களுக்கு முன்னர் ஐநா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டுவர வேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்தத் தொடங்கின. அதில் அமெரிக்காவும் ஒன்று.

போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.

இந்தநிலையில் நேற்று காசாவிற்கு நிவாரண பொருட்களை ஐநா அனுப்பி வைத்திருக்கிறது. ஆனால், காசாவிற்கு செல்லும் இரண்டு பாதைகளை இஸ்ரேல் அடைத்து வைத்திருக்கிறது. அதை உடனடியாக நீக்கக்கோரி ஐநா கேட்டுக்கொண்டது. அதற்கு, இஸ்ரேல் மூன்றாவது ஒரு வழியை திறந்துள்ளது என்றும், அவ்வழியாக பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்றும் கூறியது. ஆனால், அந்த வழியே சென்றால், காசாவிற்கு செல்ல முடியவில்லை என்று ஐநா தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து இப்போது வரை நிவாரண பொருட்கள் காசாவிற்கு செல்லாமல், ட்ரக்குடன் பல மணி நேரமாகக் காத்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
இந்திய மக்களிடம் கோரிக்கை விடுத்த மாலத்தீவு அமைச்சர்!
Palestine flag

இந்த நெருக்கடிக்கு மத்தியில் ஐநாவில் பாலஸ்தீனத்தை நிரந்தர உறுப்பினராக்குவது குறித்த வாக்கெடுப்பு மே 10ம் தேதி நடைபெறுகிறது. இன்று வரை பாலஸ்தீனத்தின் கோரிக்கைகளை ரஷ்யாவும், சீனாவும் இன்னும் பிற இஸ்லாமிய நாடுகளும் ஐநாவில் முன்வைத்து வருகின்றன. ஒருவேளை, பாலஸ்தீனம் நிரந்தர உறுப்பினராகிவிட்டால் போர் நிறுத்தம் குறித்தும், இஸ்ரேல் அத்துமீறல் குறித்தும் வலுவான வாதங்களை சர்வதேச நாடுகள் மத்தியில் வைக்க முடியும். இதற்கான முயற்சியில் பாலஸ்தீனம் தற்போது இறங்கியுள்ளது. ஆனால், அமெரிக்காவும் இன்னும் பிற அமெரிக்க ஆதரவு நாடுகளும் இதில் குழப்பாமல் இருந்தால் எல்லாம் சரியாக நடக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com