
உலக மக்களுக்கு அடிப்படை தேவையான ஒன்று உணவு. அவர்களின் தேவைக்கேற்ப சூழலுக்கேற்ப அவர்களின் உணவை தேர்வு செய்து சாப்பிட்டு வாழ்ந்து வருகின்றனர். இதில் சைவம், அசைவம், முட்டை மட்டும் சாப்பிடுவேன், பூண்டு வெங்காயம் சேர்க்காமல் சாப்பிடுவேன்... என்று பல வகைகளில் தங்களது உணவை தேர்வு செய்து சாப்பிடுகிறார்கள்.
ஆனால் இதில் மிகவும் பொதுவானது சைவம், அசைவம். காய்கறிகள், பால் பொருட்களை சாப்பிடுபவர்களை சைவ பிரியர்களாகவும், உயிருள்ள ஒன்றை அதாவது நடமாடக்கூடிய ஒன்றை சாப்பிடுபவர்களை அசைவப்பிரியர்கள் என்றும் கருதுகின்றனர்.
இதில் பல வருடங்களுக்கு முன்பே முட்டை சைவம் என கருத்துக்கள் பரவி வந்தது. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து முட்டையையும் சைவத்தில் சேர்த்து பலரும் சாப்பிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஒரு புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. இணையதளத்தில் பயனர் ஒருவர் பன்னீர், பாசிப்பருப்பு, சாலட், வால்நட்ஸ் என சில உணவு பொருட்களின் புகைப்படத்தை பகிர்ந்து இவை நல்ல புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்த சைவ உணவு என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த மருத்துவர் சில்வியா கற்பகம் என்பவர், பால் பொருட்கள் சைவம் அல்ல என்றும் அவை விலங்குகள் மூலம் பெறப்படுபவை என்பதால் அவை அசைவம் எனவும் பதிவிட்டிருந்தார். இந்த கருத்து இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதனால் கொந்தளித்த மக்கள், பால் பொருட்கள் கொல்லப்படுபவை அல்ல என விவாதித்து வருகின்றனர். இந்த விவாதம் ட்விட்டரையே ஆடவைத்துள்ளது. பதிலுக்கு பதில் கருத்து தெரிவித்து சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். ஆனால் மருத்துவர் விடாப்பிடியாக முட்டை அசைவம் தானே, அதே போல் பால் பொருட்களும் அசைவம் தான் என தன் கூற்றை முன் வைத்து கொண்டே இருக்கிறார். இதன் விளைவு என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் கடந்த 2 நாட்களாக இந்த பேச்சுக்கள் தான் உலாவி வருகிறது.
பன்னீர் சைவமா?அசைவமா?