பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறுகிறாரா பவன் கல்யாண்?

பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறுகிறாரா பவன் கல்யாண்?

நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியான நதேந்திலா மனோகர், தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார். பா.ஜ.கவுடனான ஜன சேனாவின் கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டதாக ஹைதராபாத் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஆந்திரப் பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்பிருக்கிறது. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் அரசால், மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத தடுமாற்றத்தில் இருக்கிறது. ஆனாலும், ஆட்சிக்கு எதிரான அதிருப்தி எதுவும் இதுவரை தெரியவில்லை.

ஓய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி, ஆட்சியை தாக்க வைத்துக்கொள்ளுமா என்பது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பொறுத்தது என்கிறார்கள். ஆந்திராவின் முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி, ஓய்.எஸ்.ஆர் கட்சியை எதிர்த்து அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுமளவுக்கு இன்னும் தயாராகவில்லை.

பா.ஜ.கவுடன் கூட்டணியில் உள்ள பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் தடுமாற்றத்தில் உள்ளது. தெலுங்கு தேசம் கட்சியோடு கூட்டணி அமைக்கவேண்டும் என்று தொண்டர்கள் விரும்புவதாக நிர்வாகிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஜன சேனா, பா.ஜ.கவுடன் கூட்டணியில் இருந்து வருகிறது. கூட்டணிக்குள் குழப்பங்கள், கசப்புகள் நீடித்து வருகின்றன நிலையில் பா.ஜ.க கூட்டணியை விட்டு வெளியே தெலுங்கு தேச கட்சியோடு கூட்டணி சேரும் என்கிற எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன.

2014ல் கட்சி ஆரம்பித்த பவன் கல்யாண், முதல் தேர்தலில் போட்டியிடவில்லை. 2019ல் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்ட ஜன சேனா, ஒரே ஒரு ரிசர்வ் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. பவன் கல்யாண், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார்.

வெற்றி பெற்ற ஜனசேனா வேட்பாளரும் கட்சியை விட்டு, ஆளுங்கட்சியில் சேர்ந்துவிட்டதால் ஜன சேனா கட்சிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் 2024 தேர்தலை எதிர்கொள்ளவேண்டிய சூழலில், ஏதாவது ஓரு கூட்டணியில் இடம் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் பவன் கல்யாணின் கட்சி இருந்து வருகிறது. ஆனால், ஜன சேனாவுடனான கூட்டணி குறித்து நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளை தெலுங்கு தேசம் உறுதிப்படுத்தவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com