வயநாடு தொகுதியில் போட்டியிடப் போகிறாரா பிரியங்கா காந்தி?

வயநாடு தொகுதியில் போட்டியிடப் போகிறாரா பிரியங்கா காந்தி?
Published on

மோடி குறித்தான அவதூறு வழக்கில் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து ராகுல்காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அதற்கு முன்பு காலியாக இருக்கும் வயநாடு தொகுதிக்கு தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்து வருகிறது. அதற்கேற்ப வயநாடு தொகுதிக்கான மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் கலெக்டர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் நேற்று பரிசோதனை செய்யப்பட்டது.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

மேலும் அதில் மாதிரி வாக்கு பதிவும் நடத்தப்பட்டது. அனைத்து கட்சி பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர். வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கான இடைதேர்தலை நடத்த மத்திய தேர்தல் கமிஷன் தயாராகி வருவதை தொடர்ந்து அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

ராகுல் காந்தி இங்கு போட்டியிட்ட போது அவருக்காக அவரது சகோதரி பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார். அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்ட பின்னர் நடந்த காங்கிரஸ் கூட்டத்திலும் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். மேலும் அவரும் வயநாடு தொகுதி மக்களை தொடர்ந்து சந்தித்து கட்சிக்காக பிரசாரம் செய்து வந்தார். இதன் காரணமாக இந்த இடைத் தேர்தலில் அவர் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் தொண்டர்களும் பிரியங்கா இங்கு போட்டியிடுவார் என பெரிதும் ஆர்வமுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com