
தமிழ்நாட்டில் அக்டோபர் 2-ம் தேதி நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு போராட்டம் நடத்த எந்த அமைப்புக்குமே அனுமதியில்லை’ என காவல்துறை மறுத்துள்ளது.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்குக் காவல்துறையால் அனுமதி மறுத்துள்ள நிலையில் மீண்டும் உயர் நீதிமன்றத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு நாடியிருக்கிறது. இதற்கு முன்னர் இது தொடர்பான வழக்கில் நீதிமன்றமும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆர்எஸ்எஸ் அமைப்பு தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மற்றும் விசிக மனிதச்சங்கிலிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக காவல்துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு நீதிமன்றத்தை நாடியிருக்கும் நிலையில், தமிழக காவல்துறையும் சீராய்வு மனுவினை தாக்கல் செய்திருக்கிறது.
இன்று வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் உயர் நீதிமன்ற தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும் என அனைவருமே ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.