
தரணி ராஜேந்திரன் இயக்கியுள்ள 'யாத்திசை' திரைப்படம் இந்த வாரம் வெளியாகி இருக்கிறது. சக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சமர், ஜமீல், சுபத்ரா, வைதேகி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பெரிய பட்ஜெட் இல்லை, சிஜி சரியில்லை, நடிகர்கள் யாரென்றே தெரியவில்லை. சில இடங்களில் பேசுவதே புரியவில்லை போன்ற விஷயங்கள் பலவீனங்கள் இருந்தாலும், சிறிய பட்ஜெட்டில் மிக பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது யாத்திசை திரைப்படம். குறுக்கியா காலத்தில் யாத்திசை படத்தை திறன் பட இயக்குநர் தரணி ராசேந்திரன் எடுத்துக் காட்டி இருக்கிறார். 7 கோடி தான் பட்ஜெட்.
பாலை நிலத்து வீரனாக எயினர் கூட்டத்து தலைவன் கொதி கதாபாத்திரத்தில் சேயோன் நடிப்பில் மிரட்டி உள்ளார். ரணதீரன் பாண்டியனாக நடித்துள்ள சக்தி மித்ரனின் நடிப்பும் சிறப்பு. பாடல்கள் பெரிதாக ஒட்டவில்லை என்றாலும் இசையமைப்பாளர் சக்கரவர்த்தி பிஜிஎம்மில் ஸ்கோர் செய்கிறார். அகிலேஷ் காத்தமுத்துவின் ஒளிப்பதிவில் படம் சிறிய பட்ஜெட்டிலேயே பிரம்மாண்டமாக தெரிகிறது. கலை இயக்குநரின் பங்களிப்பு மற்றும் ஆடை அலங்காரங்கள் என அனைத்துமே சிறப்பாக உள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் சோழர்களின்வருகையை இயக்குநர் மணிரத்னம் காட்டிய நிலையில், அதற்கு போட்டியாகபாண்டியர்களின் படை பலத்தையும் குறுநில மன்னர்களான எயினர்களின் படைபலத்தையும் பறைசாற்றும் விதமாக யாத்திசை படத்தை இயக்குநர் தரணிராசேந்திரன் எடுத்துக் காட்டி இருக்கிறார்.இந்நிலையில், வெறும்7 கோடி பட்ஜெட்டில் புதியவர்களின் முயற்சிக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.
யாத்திசை திரைப்படம் ஒரே நாளில் மொத்தமாக 77 லட்சம் வரை வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மேலும், இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.