சிமெண்ட் விலை உயர்கிறதா? கட்டுமான தொழில் பாதிப்பு!

சிமெண்ட்
சிமெண்ட்

இந்த மாதம் சிமெண்டின் விலை 10 முதல் 30 ரூபாய் வரை உயர்த்தபட உள்ளதாக சிமெண்ட் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் கட்டுமான தொழில் கடுமையாகப் பாதிக்கப்படக் கூடும் என்ற அச்சம் வீடு கட்டுவோர் இடையே எழுந்துள்ளது.

சிமெண்ட் மூலப்பொருட்களின் விலையேற்றத்தைப் பொருத்து ஒவ்வொரு மாதமும் 1 முதல் 2 விழுக்காடு வரை சிமெண்டின் விலை உயர்த்தி வருகிறார்கள் உற்பத்தியாளர்கள். அதிலும் கிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் தான் அதிக விலையேற்றம் செய்யப்படுகிறது. 2 முதல் 3 விழுக்காடு வரை ஒவ்வொரு மாதமும் அதிகரிக்கப்படுகிறது. ஆனால் வடமாநிலங்களில் 1 முதல் 2 விழுக்காடு விலை குறைக்கப்படுகிறது.

சிமெண்ட்
சிமெண்ட்

கடந்த அக்டோபர் மாதம் பண்டிகை மற்றும் மழைக்காலம் என்பதால் சிமெண்டின் தேவை குறைவாக இருந்தது. தற்போது கட்டுமானத் துறை எழுச்சி பெற்றுள்ளதால் தற்போதைய சிமெண்டின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் இந்த மாதம் மூட்டை ஒன்றிற்கு 30 முதல் 40 ரூபாய் வரை சிமெண்டின் விலையை உயர்த்த சிமெண்ட் உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாக உள்ளது.

இந்தியாவில் எப்போதும் சிமெண்டின் விலை ஏறுமுகமாகவே இருப்பதால் வீடு கட்டும் சாமானிய மக்கள் தான் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் கட்டுமான தொழில் எவ்வளவு வளர்ச்சி அடைந்து வருகிறதோ, அதே வேகத்தில் கட்டுமான பொருட்களின் விலையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழை எளிய வீடு கட்டும் மக்கள் போன்றோர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com