இதெல்லாம் ஒரு கின்னஸ் சாதனையா? - ஆஸ்திரேலிய இளைஞரின் சாகசம்!

இதெல்லாம் ஒரு கின்னஸ் சாதனையா? - ஆஸ்திரேலிய இளைஞரின் சாகசம்!

உலகில் உள்ள மனிதர்கள் ஏதாவது ஒரு புதுமையைச் செய்து கின்னஸ் உலக புத்தகத்தில் இடம்பெறுகின்றனர். இடுப்பளவு உள்ள, கால்கள் இல்லாத இளைஞர் 20 மீட்டர் தூரத்தை 4.57 விநாடிகளில் கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இதேபோல காட்விட் என்னும் பறவை தொடர்ந்து 11 நாட்கள் இடைவிடாமல் 13,500 கி.மீ. பயணம் செய்து சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவில் ஒரே நேரத்தில் 1500 மாணவர்கள் பகவத் கீதையை பாராயணம் செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த டோபிகீத் என்னும் நாய் 22 வயதை எட்டி அதிக நாட்கள் உயிர்வாழ்ந்த நாய் என்ற அளவில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதுபோன்ற சாதனைகளை தொடர்கின்றன.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த ஆஸ்கர் லினாக் என்பவர் புதுமையாக 30 விநாடிகளில் 12 டேபிள் டென்னிஸ் பந்துகளை சுவற்றில் அடித்து அதை ஷேவிங் கிரீம் தடவிய தலையில் கேட்ச் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதாவது சுவற்றில் மோதிய பந்து நேராக இவரது தலையில் வந்து சிக்கியது.

இவர் கடந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி இந்த சாதனை புரிந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இந்த விடியோ டுவிட்டரில் வெளிவந்துள்ளது. “இளைஞர் ஒருவர் டேபிள் டென்னிஸ் பந்துகளை சுவற்றில் எறிந்து அதை ஷேவிங் கிரீம் தடவிய தலையில் கேட்ச் பிடித்துள்ளார். நீங்களும் இதை செய்து பார்க்கலாம்” என்று அந்த விடியோவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரப்பரினால் ஆன சிக்கனை தொலைதூரத்துக்கு தூக்கி எறிவது உள்ளிட்ட பல்வேறு கின்னஸ் சாதனைகளை ஆஸ்கர் லினாக் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com