இது ட்விட்டர் அலுவலகமா, இல்லை ஹோட்டல் ரூம்களா?

இது ட்விட்டர் அலுவலகமா, இல்லை ஹோட்டல் ரூம்களா?
Published on

லகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர். திடீரென சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் தலைமை அலுவலகம், ஹோட்டல் ரூம்களாக மாற்றப்பட்டுள்ளது. 

என்னதான் எலான் மஸ்க ட்விட்டர் தளத்தை வாங்கி, அதில் பல அதிரடியான மாற்றங்களைக் கொண்டு வந்தாலும், அவர் எதிர்பார்த்த அளவுக்கு ட்விட்டர் நிறுவனத்திலிருந்து போதிய லாபம் கிடைக்கவில்லை. வெளியிலிருந்து பார்ப்போருக்கு வேண்டுமானால் அதிலிருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைப்பது போல் தோன்றலாம். ஆனால் ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க்குக்கு மிகப்பெரிய தலைவலியாகவே இருக்கிறது. 

2022-ல் அவர் அந்நிறுவனத்தை வாங்கிய போது எல்லா ட்விட்டர் ஹெட் ஆபீஸ்களுக்கும் வாடகை பாக்கியிருந்தது. இதையெல்லாம் ட்விட்டரின் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்டை சேர்ந்தவர்கள் கவனித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு அதன் முக்கிய நிர்வாகிகள், ஊழியர்கள் என அனைவரையும் எலான் மஸ்க் பணிநீக்கம் செய்தார். 

இதனிடையே, சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க், லண்டன் ஆகிய நகரங்களில் இருக்கும் ட்விட்டர் அலுவலகங்களின் ஒப்பந்தத்தை புதுப்பிக்குமாறு எலான் மஸ்க் உரிமையாளர்களிடம் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. அதை உரிமையாளர்கள் மறுக்கவே, வாடகை கட்டுவதை எலான் மஸ்க் நிறுத்திவிட்டார். இரண்டு மாதங்களுக்கு மேலாக வாடகை பாக்கி தராததால், அதை உடனடியாகக் கட்டும்படி உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். குறிப்பாக சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தின் நிலைமை மோசமாக இருப்பதாக கட்டட உரிமையாளர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார். 

இதை எதிர்த்து ட்விட்டர் நிர்வாகமும், கடந்த ஜனவரியிலிருந்து ட்விட்டர் அளவுகளத்திலுள்ள காலி ரூம்களை ஹோட்டலாக மாற்றி உரிமையாளர் பயன்படுத்துகிறார் என குற்றம் சாட்டியது. இதற்கு உரிமையாளர் தரப்பில், ட்விட்டரில் துப்புரவு பணியாளர்கள் கூட கிடையாது, எங்களுடைய பணியாட்களை வைத்துதான் அனைத்து வேலையும் செய்து வருகிறோம். இந்நிலையில் வாடகையும் தரவில்லை என்றால் இது எந்த வகையில் நியாயம் என உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார். 

ஒருமுறை, இந்த பிரச்சனை குறித்து ட்விட்டர் நிறுவனத்தின் ஆலோசகரிடம் அதிகாலை 4 மணி வரை எலான் மாஸ் பேசியுள்ளார். அப்போது சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் "என் பிணத்தின் மீதுதான் வாடகை செலுத்த வேண்டும்" என அவர் சொல்லியதாகத் தெரிகிறது. இதை ட்விட்டர் ஆலோசகர் செய்தியாளர் களிடம் தெரிவித்த நிலையில், வரும் காலங்களில் ட்விட்டர் நிறுவனமானது மோசமான சட்டப் போராட்டங்களைச் சந்திக்கும் என சொல்லப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com