திமுக சார்பில் எம்.பி தேர்தலில் போட்டியிடப் போகிறாரா வடிவேலு?

Vadivelu and udhayanidhi
Vadivelu and udhayanidhi

தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் வடிவேலு களமிறங்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. திமுகவும் தேர்தலில் வடிவேலை இறக்கி சர்ப்ரைஸ் செய்ய உள்ளதாக அரசியல் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

வடிவேலு சினிமா துறையில் தனிக்காட்டு ராஜாவாக ஒரு காலத்தில் காமெடியில் கலக்கி வந்தார். என்னதான் இவரைப் பலர் திமிரு பிடித்தவர் என்று கூறினாலும் அவர்கள் கூட வடிவேலின் திறமைக்கு முன்னாடி வாய்த்  திறக்காமல் அப்படியே நின்றுவிடுவர். பல காலமாக நடிப்பில் தலைக்காட்டாமல் இருந்த வடிவேலு இணையத்தில் மட்டும் எப்போதுமே கலக்கிக்கொண்டு வந்தார். வடிவேலின் மீம்ஸ், ட்ரோல்ஸ் அனைத்துமே தனி இடத்தைப் பிடித்து இணையத்தில் நிலையாக ஆட்சி செய்து வந்தது. அதேபோல் அவ்வப்போது காவலன், மெர்சல் போன்ற படங்களில் நடித்தாலும் அவ்வளவாக க்ளிக் ஆகவில்லை என்றே கூற வேண்டும்.

சினிமாவில் நன்றாக வளம் வந்துக்கொண்டிருக்கும்போது வடிவேலு எடுத்த ஒரு மோசமான முடிவுத்தான் அரசியல். இப்போது அவர்மேல் இருக்கும் அனைத்து கரைகளுக்கும் அரசியலில் ஈடுப்பட்டதுதான் காரணம். கடந்த 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பாக பிரச்சாரம் செய்தார். அப்போது திமுகாவின் மீது ஈழப் பிரச்சனை, 2ஜி பிரச்சனைப் போன்ற பிரச்சனைகள் இருந்தன. அதேபோல் எதிர்க்கட்சி கூட்டணியாக அதிமுக, தேமுதிக என வலுவான கூட்டணி இருந்தது. அந்த சமயத்தில் திமுகாவிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்த வடிவேலு தேமுதிக தலைவர் விஜய்காந்த் உடன் சண்டையிட்டார். தேமுதிகாவை எதிர்த்து திமுகாவிற்கு ஆதரவாக நின்றார்.

பொதுமக்கள் கூடும் இடங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்தைக் கிண்டல் செய்து வந்த வடிவேலு அதிமுகவை மட்டும் கவனமாகத் தவிர்த்து வந்தார். அதிமுக ஆட்சிக்கு வந்தப்பின் வடிவேலு நிலைமை மிகவும் மோசமானது. வடிவேலு படங்கள் நடித்தால் கூட அது வெளியாகுமா என்ற சந்தேகத்திலே தான் இருந்தன.

அரசியல், வடிவேலுக்கு சினிமாவிலும் பிரச்சனையைக் கொடுத்தது. பின் சிறிது காலம் அவர் படத்திலும் நடிக்காமல் அரசியலிலும் ஈடுபடாமல் இரண்டையுமே தவிர்த்து வந்தார். அந்த சமையத்தில் தான் உதயநிதியுடன் மாமன்னன் படம் நடிக்க ஒரு வாய்ப்பு வடிவேலுக்குக் கிடைத்தது. அந்தப் படத்தில் அவரின் கதாப்பாத்திரம் பேசப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தடுத்து நல்ல படங்களில் கமிட் ஆக ஆரம்பித்தார்.

இதையும் படியுங்கள்:
உலகின் மிகச்சிறிய நாடு வாட்டிகனா? இல்லை.. இல்லை.. அதைவிடவும் சிறிய நாடு உள்ளதே!
Vadivelu and udhayanidhi

இந்நிலையில் தற்போது மீண்டும் அரசியல் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார் வடிவேலு. மேலும் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள லோக் சபா தேர்தலில் திமுக சார்பாக வடிவேலு களமிறங்க ஆர்வம் காட்டி வருவதாகவும், அதற்கான முயற்சிகளைச் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. சினிமாவில் ஒன்றிரண்டுப் படங்கள் மட்டுமே நடிக்கும் வடிவேலு அரசியல் பக்கம் திரும்ப முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் திமுக தரப்பிலும் சில பேச்சு வார்த்தைகள் நடப்பதாகவும் வடிவேலுக்கு வாய்ப்புக் கொடுக்கப் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com