காசா அகதி முகாமில் இஸ்ரேல் தாக்குதல்… 30க்கும் மேற்பட்டோர் பலி!

Gaza
Gaza
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on: 

காசா இஸ்ரேல் போரில் தற்போது இஸ்ரேல் காசாவின் அகதி முகாமில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் சுமார் 30க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

காசா இஸ்ரேல் போர் தொடங்கி ஒரு வருடக்காலம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் போர் முடிந்தப்பாடில்லை. போர் பதற்றம் அதிகரித்தே வருகிறது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் இந்தப் போரை தொடங்கியது. இருதரப்பினருக்கும் இடையே நடக்கும் இந்தப் போரில் அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர்.

பஞ்சம், நோயினால் மறுபக்கம் உயிர் சேதம் நிகழ்கிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பையும் எதிர்த்து இஸ்ரேல் லெபனான் மற்றும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் பெரிய நாடு என்பதால் வலுவான ஆயுதங்களைக் கொண்டு பதில் தாக்குதல் நடத்துகிறது. ஆனால், லெபனான் அதிகமான விளைவுகளை சந்தித்து வருகிறது.

ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் பிணைக்கைதிகளை வைத்திருக்கிறது. இந்தநிலையில் பிணைக்கதைகளை விடுவிக்கக்கோரி பல நாடுகள் தெரிவித்தன. ஆனால், போரை முடிவுக்கு கொண்டு வரும் வரை பிணைக்கைதிகளை விடுவிக்க மாட்டோம் என்று தற்போது ஹமாஸ் கூறியுள்ளது.

இதற்கு முன்னர் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும்வரை போரை நிறுத்தமாட்டோம் என்று கூறிவிட்டது.

இப்படியான சூழ்நிலையில்தான் இஸ்ரேல் காசாவின் முகாமில் ஒரு பெரிய தாக்குதலை நடத்தியிருக்கிறது. காசாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க எட்டு அகதி முகாம்களில் மிகப் பெரிதான ஜபாலியா அகதி முகாம் மீது இஸ்‌ரேல் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதலில் 33க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதல் அக்டோபர் 18ஆம் தேதியன்று நடத்தப்பட்டது.

இதையும் படியுங்கள்:
News 5 – (19.10.2024) த.வெ.க. கட்சி மாநாட்டில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்!
Gaza

இடிப்பாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று பாலஸ்தீன அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, காசாவின் வடக்குப் பகுதியில் உள்ள மூன்று மருத்துவமனைகளில் நோயாளிகள், காயமடைந்தோர் ஆகியோரின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அகதி முகாமில் பதுங்கியிருந்த ஹமாஸ் போராளிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்‌ரேல் தெரிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com