ஹமாஸ் குழுவின் 130 சுரங்கங்களை அழித்துவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!

ஹமாஸ் குழுவின் 130 சுரங்கங்களை அழித்துவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!

மாஸ் குழுவினரை எதிர்த்து காசாவுக்குள் நுழைந்து அதிரடியாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவத்தினர், இதுவரை 130 சுருங்கங்களை அழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. 

இந்த செய்தியை தனது எக்ஸ் தள பக்கத்தில் இஸ்ரேல் ராணுவ தலைமை செய்தித் தொடர்பாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "காசாவில் இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து இதுவரை ஹமாஸ் குழுவினரின் 130 சுரங்கங்கள் அழிக்கப்பட்டுள்ளது. அங்கு சண்டையிட்டு வரும் இஸ்ரேல் ராணுவ வீரர்களுடன் ராணுவ பொறியாளர்களும் சென்றுள்ளனர். அவர்களும் ராணுவ வீரர்களும் இணைந்து ஹமாஸ் அமைப்பினரின் ஆயுதங்கள் மற்றும் சுரங்க நிலையங்களை அழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஹமாஸ் குழுவின் சுரங்க இருப்பிடங்களைக் கண்டறிந்து, அவற்றை வெடிவைத்து அழிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்" என அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஹமாஸ் குழுவினரின் சுரங்கங்கள் அழிக்கப்படும் காணொளியையும் அவர் இணைத்துள்ளார். 

இஸ்ரேல் ஆக்கிரமித்த காசா பகுதியிலிருந்து கடந்த 2005 ஆம் ஆண்டு இஸ்ரேல் வெளியேறியது. அதன் பிறகு அந்த பகுதியை கைப்பற்றிய ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனைகள் நிலவி வருகிறது. இது பலமுறை மிகப்பெரிய போராக உருவெடுத்த நிலையில், கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது திடீரென 5000 ஏவுகணைகளை வீசி தாக்கினர். 

ஹமாஸ் குழுவினரின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, காசா பகுதியை முழுமையாக முற்றுகையிட்ட இஸ்ரேல் ராணுவம், கடந்த ஒரு மாதமாக எல்லா விதங்களிலும் தாக்குதல் நடத்தி வருகிறது. அத்துடன் காசாவுக்குள் எரிபொருள், உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லவும் தடை விதித்துள்ளது. ஹமாஸ் படையினரை முழுமையாக ஒழித்துக் கட்டுவதாக சபதம் எடுத்துள்ள இஸ்ரேல் ராணுவம், அதற்காக நடத்தி வரும் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர். 

இருப்பினும் அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தற்போது 130 ஹமாஸ் சுரங்க நிலையங்களை அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com