இஸ்ரேல் காசா போரினால், காசாவிலிருந்து 90% பேர் புலம் பெயர்ப்பு – ஐநா தகவல்!

Gaza People
Gaza People
Published on

உலகே உற்றுநோக்கும் இஸ்ரேல் காசா போரில் ஏகப்பட்ட இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அந்தவகையில் இஸ்ரேல் காசா போரினால் காசா பகுதியிலிருந்து சுமார் 90 சதவிகித மக்கள் வேறு இடத்திற்கு புலம் பெயர்ந்துள்ளதாக ஐநா அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் காசாமீதான ஆதிக்கத்தை உடைக்க ஹமாஸ் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் தீவிரவாத இயக்கமாக அறிவித்தது. அதேபோல் ஹமாஸை முழுவதுமாக ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று இஸ்ரேல் கூறிவிட்டது. இதனால், போர் மிகவும் கடுமையாக இருந்து வருகிறது. யார் என்ன கூறினாலும், இஸ்ரேல் போரை நிறுத்துவதாக தெரியவில்லை. இதனால், அப்பாவி மக்களும் உயிரிழந்துள்ளனர்.

போரில் இதுவரை 37,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசியும், பட்டிணியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.

இந்த போரிலிருந்து தப்பிக்க மக்கள் பலரும் அகதிகளாக வேறு நாட்டிற்கு தப்பி ஓடுகின்றனர். தப்பிச் செல்லும் மக்கள் இஸ்ரேலிருந்து 10கிமீ தொலைவில் இருக்கும் யூனிஸ் என்ற நகரத்தில் தஞ்சம் அடைகின்றனர்.

இந்நிலையில், காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் தொடங்கிய பிறகு, அந்தப் பகுதியைச் சேர்ந்த 90 சதவீதம் பேர் தாங்கள் வசித்துவந்த பகுதிகளில் இருந்து புலம் பெயா்ந்து தவித்துவருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்:
உலகில் மிக அதிகமாக கட்டணம் வசூலிக்கும் பள்ளி இதுதான்… ஒரு வருடத்திற்கு 1.30 கோடிங்க!
Gaza People

இன்னும் 10 சதவிகித மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகதான் உள்ளது. இஸ்ரேல் போரை நிறுத்தாமல், தொடர்ந்து போர் நடந்து வந்தால், அங்கு இப்போது இருக்கும் மக்களும் புலம்பெயர்ந்து விட வாய்ப்புள்ளது.

சமீபத்தில் காசாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகளை விடுவிப்பது குறித்த பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒத்துக் கொண்டு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது. ஆனால், அதன்பிறகு இதுகுறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com