இந்திய ராக்கெட் மூலம் 36 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ!

இந்திய ராக்கெட்
இந்திய ராக்கெட்
Published on

பிரிட்டனை சேர்ந்த ஒன்வெப் நிறுவனம், 36 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.  அதன் அடிப்படையில் நேற்று முன் தினம் (அக்டோபர் 23) அதிகாலை 12 மணி ஏழு நிமிடங்களுக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, 36 செயற்கைக்கோள்களுடன், எல்விஎம் - 3 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.

பூமியில் இருந்து புறப்பட்ட 19 நிமிடங்கள் 15 வினாடியில், ராக்கெட் திட்டமிட்டபடி 601 கிலோமீட்டர் துாரமுள்ள புவி சுற்றுவட்ட பாதையில்  ஐந்தாயிரத்து 796 கிலோ எடை கொண்ட 36 செயற்கைக் கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்த துவங்கியது. பின்னர் அடுத்த சில நிமிடங்களில் அனைத்து செயற்கைக்கோள்களும் திட்டமிட்ட இலக்கில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன.

இதன்மூலம் ‘எல்விஎம் 3'  ராக்கெட் முதல்முறையாக வணிக பயன்பாட்டுக்கு ஏவப்பட்டுள்ளது.  இந்த  ராக்கெட்டின் உயரம் 43 புள்ளி 50 மீட்டராகும்.  இஸ்ரோ ஏவியதிலேயே மிகவும் அதிக எடைகொண்ட ராக்கெட் இதுவே ஆகும்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், ‘’அடுத்ததாக சந்திராயன்-3 விண்கலம் ஏவப்பட தயாராக உள்ளது. தமிழகத்தில் குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்க 2 ஆண்டுகள் ஆகும்’’ என தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com