அடுத்த டார்கெட்டுக்கு ரெடி.. சந்திரயான் 4க்கு ப்ளான் போட்ட இஸ்ரோ!

சந்திரயான்
சந்திரயான்
Published on

சந்திரயான் 3 திட்டத்தின் மகத்தான வெற்றியை தொடர்ந்து, சந்திரயான் 4 திட்டத்திற்கான முதற்கட்ட சோதனைகள் இன்னும் 2 ஆண்டுகளில் நடைபெறும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் 3 திட்டத்தில் நிலவின் தென் துருவத்தில் soft landing செய்து, ரோவர் மூலம் பல்வேறு ஆய்வுகள் நிலவிலேயே மேற்கொள்ளப்பட்டன. ஆனால், சந்திரயான் 4 திட்டத்தில், அடுத்தகட்டமாக நிலவில் இருந்து மாதிரிகள் சேகரித்து பூமிக்கு எடுத்து வந்து அதனை ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதல் மூன்று சந்திரயான் திட்டங்களைக் காட்டிலும், சந்திரயான் 4 திட்டத்தின் ஆய்வுகள் மிகப்பெரிய அளவில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. சந்திரயான் 3 திட்டத்தில், நிலவின் தென் துருவத்தில் களமிறக்கப்பட்ட பிரக்யான் ரோவரின் எடை வெறும் 30 கிலோ மட்டுமே.

ஆனால், சந்திரயான் 4 திட்டத்தில், ரோவரின் திட்டமிடப்பட்ட எடை 350 கிலோ வரை இருக்கக் கூடும் என தெரிகிறது. பிரக்யான் ரோவர் சுமார் 500 மீட்டர் சுற்றுப் பகுதியில் மட்டுமே ஆய்வு நடத்தி தகவல்களை சேகரித்த நிலையில், சந்திரயான் 4 திட்டத்தின் ரோவர் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுப் பகுதியில் உலவிச் சென்று ஆய்வு நடத்தும் என கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி சந்திரயான் 4 திட்டத்தின் ரோவரில் சேகரிக்கப்படும் மாதிரிகளை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் சவாலான இலக்கையும் இஸ்ரோ சாத்தியப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது சந்திரயான் 4 திட்டம் இன்னும் 5 முதல் 7 ஆண்டுகளில் சாத்தியமாகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com