சேலம் உருக்காலைக்கு இஸ்ரோ பாராட்டு!

சேலம் உருக்காலைக்கு இஸ்ரோ பாராட்டு!

நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் ஏவியது. புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் நிலை நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை தொலைவு அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிலவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலம் புவி வட்டத்தின் இறுதி சுற்றுப் பாதைக்குள் செலுத்தப்பட்டுள்ளது. அடுத்து சந்திரயான்-3 விண்கலம் நிலவின் நீள் வட்ட பாதைக்குள் உந்தி தள்ளப்பட்டு வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவில் மெதுவாகத் தரை இறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான்-3 விண்கலத்தை ஏவிய எல்.வி.எம்.-3, எம்4 ராக்கெட்டில் வெப்பத்தைத் தாங்கும் குளிா்ந்த உருட்டு தகடுகளை வழங்கியதில் பங்கு பெற்று பெருமை சேர்த்துள்ளது உலக அளவில் இரும்புக்குப் புகழ்பெற்ற சேலம் உருக்காலை. இந்த சந்திராயன் 3 விண்கலத்தில் சேலம் உருக்காலையில் தயாரிக்கப்பட்ட இரும்பு பயணிக்கிறது ஆம். இந்த இரும்பு சந்திரன் இறங்கி தனது வெற்றித் தடத்தை பதிக்க இருக்கின்றது.

இந்த நிலையில், சந்திரயான் -3 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்ட நிகழ்வில் குளிா்ந்த உருட்டு தகடுகளை உற்பத்தி செய்து வழங்கிய சேலம் உருக்காலை நிா்வாகத்துக்கு நிா்வாகத்துக்கு இஸ்ரோ அமைப்பின் திரவ இயக்க மையம் பாராட்டு தெரிவித்துள்ளது.

சேலம் உருக்காலை நிர்வாக இயக்குனர் வி.கே. பாண்டேவுக்கு திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவின் பொருட்கள் மற்றும் உற்பத்திப் பிரிவு  துணை இயக்குநா் பி.மருதாச்சலம் பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளாா். அதில், "நிலவின் தென் துருவ பகுதியில் ஆய்வு செய்ய எல்.வி.எம்.-3 எம்4 என்ற ராக்கெட்டில் சந்திரயான் -3 விண்கலம் ஏவப்பட்டது. இதில் எல்.வி.எம்.-3 எம்4 ராக்கெட்டின் உந்து விசை இயந்திரத்தில் வெப்பத்தைத் தாங்கும் 2.3 மில்லி மீட்டா் அளவு கொண்ட குளிா்ந்த உருட்டு தகடுகளைத் தேவையான தர நெறிமுறைகளுடன் இஸ்ரோவுக்கு வழங்கிய சேலம் உருக்காலை நிா்வாகத்துக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளாா். 

இது குறித்து அதிகாரிகள் சொன்னது "கடந்த முறை சந்திராயன் -2 விண்கலம் ஏவப்பட்டபோது சேலம் உருக்காலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு செல்லப்பட்டு அந்த விண்கலத்தின் கிரையோசெனிக் என்ஜினில் பொருத்தப்பட்டது. அதுபோலவே தற்போதும் சந்திராயன் -3  விண்கலத்தில் இன்ஜின் மற்றும் எரிபொருள் டேங்க் பாதுகாப்பிற்கு கவசமாக சேலம் ஒரு காலையில் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது அதிக வெப்பத்தை தாக்கும் திறன் கொண்ட நம்பர் ஒன் உற்பத்தி பொருளாக இந்த ஸ்டீல் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கி இருக்கிறோம் சந்திரனில் விண்கலம் இறங்கும் போது அதில் சேலம் உருக்காலையும் கால்பதிக்கிறது என்பது பெருமை அளிக்கிறது" என்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com