
இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (Indian Space Research Organisation) பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இஸ்ரோவில் பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். இந்நிலையில் இஸ்ரோவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இந்த வேலைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித்தகுதி என்பது குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்...
பணியிடங்கள் :
Technical Assistant (தொழில்நுட்ப உதவியாளர்)
சிவில், மெக்கானிக்கல், மின்சாரம், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், டர்னர், எலக்ட்ரீஷியன் தலா - 2
ஃபிட்டர், மின்னணுவியல், மெஷினிஸ்ட், பிளம்பர், மெக்கானிக் குளிர்பதன மற்றும் ஏர் கண்டிஷனிங் தலா - 1
கணினி அறிவியல்/ஐடி - 3
என காலியாக உள்ள 20 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பப்படும் நபர்கள் அகமதாபாத்தில் பணியிடம் ஒதுக்கப்படும்.
கல்வி தகுதி:
* சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ்/ ஐடி, எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கு துறை சார்ந்த பிரிவில் டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
* ஃபிட்டர், மின்னணுவியல், மெஷினிஸ்ட், பிளம்பர் உள்ளிட்ட இதர காலிப் பணியிடங்களுக்கு SSLCயுடன், ITI முடித்திருக்க வேண்டியது கட்டாயம்.
வயது வரம்பு:
18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டு தகுதி வாய்ந்த அனைவரும் விண்ணப்பிக்கலாம். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
மாத சம்பளம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு மாதம் ரூ.44,900 - ரூ.1,42,400 சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம் - ரூ.750. எஸ்சி/எஸ்டி, பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணம் இல்லை.
தேர்வு எழுதிய பிறகு ரூ.500 திருப்பி அளிக்கப்படும்.
உங்கள் விண்ணப்பங்களை https://www.prl.res.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
தேர்வு தொடர்பான விவரங்களை https://www.prl.res.in/OPAR/assets/pdfs/0225.pdf என்ற இணையதள முகவரிக்கு சென்று அறிந்து கொள்ளலாம்.
தேர்வு முறை :
எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.10.2025