இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது!

பி.எஸ்.எல்.வி. சி 55 ராக்கெட்
பி.எஸ்.எல்.வி. சி 55 ராக்கெட்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் உலகில் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. இஸ்ரோ பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

அந்த செயற்கைக்கோள்களில் நம் நாட்டுக்குத் தேவையான பேரிடர் மேலாண்மை, காலநிலை மாற்றம், தகவல் தொடர்பு, தொலையுணர்வு உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்காக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. மேலும், வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது.

பி.எஸ்.எல்.வி. சி55 ராக்கெட்
பி.எஸ்.எல்.வி. சி55 ராக்கெட்

சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. இந்த ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.

இன்று மதியம் சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 741 கிலோ எடை கொண்ட 'டெலியோஸ்-2' என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள், இதனுடன் 16 கிலோ எடை கொண்ட லுமிலைட்-4 என்ற 2 செயற்கைகோள்களை கிழக்கு நோக்கி குறைந்த சாய்வு சுற்றுப்பாதையில் ஏவப்படுகிறது.

இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து மதியம் 2.19 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்கிறது. இந்த செயற்கைக்கோள் மூலம் இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட தகவல்களை பெற முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com