சிறப்பு ஒதுக்கீட்டு மருத்துவர்கள் அரசு மருத்துவமனையில் ஐந்தாண்டு பணியாற்றுவது கட்டாயம்!

சிறப்பு ஒதுக்கீட்டு மருத்துவர்கள் அரசு மருத்துவமனையில் ஐந்தாண்டு பணியாற்றுவது கட்டாயம்!

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் கீழ் முதுநிலை மருத்துவம் படித்து முடித்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் 5 ஆண்டு கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்று விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளான எம்.டி, எம்.எஸ் படிப்புகளுக்கு 2,100 இடங்கள் உள்ளன. இதில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும், 50 சதவீத இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கும் பகிரப்படுகின்றன.

தமிழ அரசின் ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 50 சதவீத இடங்களுக்கு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் கலந்தாய்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்வது வழக்கம். மேலும் அதில் சிறப்பு ஒதுக்கீடாக 525 இடங்கள் தமிழ்நாடு அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றிய அரசு மருத்துவர்களுக்கும், எம்பிபிஎஸ் முடித்து அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் அரசு மருத்துவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முதுநிலை படிப்பு முடித்தவர்கள் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டு பணியாற்றுவது கட்டாயமாக இருந்த நிலையில் தற்போது அந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறையை போக்கவும், சிறப்பு வாய்ந்த மருத்துவர்கள் படித்து முடித்த பிறகு வெளிநாடுகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் செல்வதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.மேலும் 5 ஆண்டு காலம் பணியாற்ற விரும்பாத முதுநிலை பட்டப் படிப்பு மாணவர்கள் 40 லட்சம் ரூபாயும், பட்டயப் படிப்பு மாணவர்கள் 20 லட்சம் ரூபாயும் ஈடு தொகையாக அரசுக்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இப்படி வழங்கும் மாணவர்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com