இனி நீதிமன்றங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம்!

இனி நீதிமன்றங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் முகக்கவசம் அணிவது தற்போது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

நீதிமன்ற அறை, நீதிபதிகள் அறை, நீதிமன்ற வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கவும், நுழைவு வாயில் மற்றும் முக்கிய இடங்களில் சானிடைசர் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களிலும் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டுமென்றும், கைகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், வழக்கு பட்டியலில் இல்லாத வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழலில் வரும் 17-ம் தேதி முதல், சென்னை உயர்நீதிமன்றம் உட்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாட்டில் புதிதாக 11,109 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மொத்த உயிரிழப்பு 5,31,064 ஆக அதிகரித்துள்ளது. 49,622 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 6,456 பேர் குணமடைந்துள்ளனனர். நாடு முழுவதும் சுமார் 220.66 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீதிமன்றங்களில், அலுவலர்கள், ஊழியர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com