இந்தி ஒழிக என்பதல்ல தமிழ் நீடுடி வாழ்க என்பதே: நடிகர் கமல்ஹாசன்!

பிறந்தநாள் விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன்!
கமல்ஹாசன்
கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் தனது 68-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியினையும் நடத்தி வருகிறார் . நேற்று பிறந்தநாள் விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன் சென்னை மயிலாப்பூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளிடம் உரையாற்றினார். அதில் ``அரசியல் என்பது சிலருக்கு பிழைப்பு, சிலருக்கு வாழ்வதற்கான வழி, சிலருக்கு கெளரவம், சிலருக்கு தொழில். ஆனால் நமக்கு அரசியல் என்பது கடமை. நான் பிக்பாஸின் மூலமாக மக்களுடன் உரையாடுகிறேன்.

நான் செய்யும் நல்ல காரியங்களுக்கு என் புகைப்படங்களை போடுவதில்லை. நல்லவை எதற்கும் அடையாளம் தேவையில்லை. பிறந்தநாள் விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன்

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

காந்தி எதுவெல்லாம் நடக்க கூடாது என பயந்துக் கொண்டிருந்தாரோ அதனை எல்லாம் கடந்த 75 ஆண்டுகளாக அரங்கேற்றிக்கொண்டிருக்கிறோம். .

எனக்குப் பெரியாரின் பாதிப்பு உண்டு. ராமானுஜரின் பாதிப்பும் உண்டு. இரண்டு பேரின் கருத்துகளும் ஒன்றாக இருப்பதாகத் தான் நான் உணர்கிறேன். அதோடு காந்தியாரின் பாதிப்பும் எனக்கு உண்டு. அவரும் அதை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறார். எனக்கு புத்தரையம் பிடிக்கும். அவர் தேர்ந்தெடுத்த பாதை மிக கடினமானது. அவர் கடவுள் மறுப்பை விட மனித நேயத்தை தான் கடவுளாக கருதினார்.

விரைவில் நான் உங்களுடன் உரையாடும் வகையில் பத்திரிகை தொடங்க இருக்கிறோம். அதை எல்லோரிடமும் கொண்டு செல்ல வேண்டும்.

ஏன் இந்தி படத்தில் நடிப்பதில்லை எனக் கேட்கிறார்கள். நான் இந்தி ஒழிக என்று சொல்லமாட்டேன். சிறு வயதில் சொல்லியிருக்கேன். அப்போது எனக்குத் தெரியாது. நான் சொல்ல விரும்புவது இந்தி ஒழிக என்பதல்ல தமிழ் வாழ்க, நீடூழி வாழ்க என்பதுதான்." எனப் பிறந்தநாள் விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் பேசினார்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com