இந்தியாவில் இஸ்லாமியர்களை வாழவிட்டது தவறு – அமைச்சர் கருத்தால் சர்ச்சை!

இந்தியாவில் இஸ்லாமியர்களை வாழவிட்டது தவறு – அமைச்சர் கருத்தால் சர்ச்சை!
Published on

ஏற்கனவே என்.டி.ஏ. அமைச்சர் கிரிராஜ் இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக பேசியது சர்ச்சையான நிலையில், மீண்டும் சர்ச்சைக்குறிய வகையில் இஸ்லாமியர்களைப் பற்றி பேசியிருக்கிறார்.

பாஜக மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றிபெற்றது. அதேபோல் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்த ஆட்சியில் மூன்றாவது முறையாக தேர்வுசெய்யப்பட்டவர் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங். இவர் ஆரம்பத்திலிருந்தே இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசி சர்ச்சையில் அடிக்கடி மாட்டிக்கொள்கிறார்.

இவர் கடந்த மாதம் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், இஸ்லாமியர்கள் குறித்து பேசியதே, இன்னும் மக்கள் மனதை விட்டு நீங்கவில்லை. ``இஸ்லாமியர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. எனக்கும் அவர்களுக்காகப் பணியாற்றுவதில் விருப்பமில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி அவர்கள் மீது ஒருபோதும் பாரபட்சம் காட்டவில்லை என்றாலும், எங்கள் வேட்பாளர்களைத் தோற்கடிக்க அவர்கள் வழிவகுத்துவிட்டனர்." என்று பேசினார்.

இப்போது மீண்டும் இவர் இஸ்லாமியர்களைத் தாக்கி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ``1947-ல் அனைத்து இஸ்லாமியர்களும் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டிருந்தால் நாட்டின் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும். அவர்களை அனுப்பாதது இந்த நாட்டின் துரதிர்ஷ்டம். ஒருவேளை அப்போதே அனைத்து இஸ்லாமியர்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருந்தால், சனாதனம் மீது கலாசார தாக்குதல் நடத்தும் விதமாக யாரும் கேள்விகளை எழுப்பியிருக்க முடியாது.” என்று பேசியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
10 சிம்கார்டுகள் வைத்திருந்தால், மூன்று ஆண்டுகள் சிறை!
இந்தியாவில் இஸ்லாமியர்களை வாழவிட்டது தவறு – அமைச்சர் கருத்தால் சர்ச்சை!

இவ்வாறு இவர் பேசியதும் வகுப்புப்பிரிவினையை கிளப்பிவிடுகிறார் என்று மக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்னதாக, மேற்கு வங்கத்தின் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, ``இந்த ஆண்டு மாநிலத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும், கடந்த வாரம் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் பாஜகவின் மோசமான செயல்பாட்டிற்கு பெங்கால் இஸ்லாமியர்கள் தான் காரணம். நமக்கு யார் வாக்களித்தார்களோ அவர்களுக்காக மட்டும் நாம் நிற்பது தான் சரி.” என்று பேசியது சர்ச்சையானது என்பது குறிப்பிடவேண்டிய ஒன்று. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com