12 வருடங்கள் ஆகின்றன! பாடகி சித்ராவின் உருக்கமான பதிவு!
தென்னிந்தியத் திரையுலகில் இசைக்குயில் எனவும், சின்னக்குயில் எனவும் அழைக்கப்படுபவர் பாடகி கே.எஸ்.சித்ரா.
மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளம் என பல மொழிகளில் பாடி வருகிறார். இவர் ஆறு முறை தேசிய விருதையும், ஆறு தடவை தென்னிந்திய பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார்.
இவரது குரலில் ஒவ்வொரு பாடல்களும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தில்கூட இவர் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.
பாடகி சித்ரா, விஜய் சங்கர் என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில், இவருக்கு நந்தனா என்ற பெண் குழந்தையும் இருந்தது.
இந்நிலையல், 2011ம் ஆண்டு பாடகி சித்ரா துபாயில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். அச்சமயம், 9 வயதே ஆன அவரது மகள் நந்தனா, யாரும் எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்நிலையில், தனது மகளின் பிரிவால் மிகுந்த வேதனைக்குள்ளானார் பாடகி சித்ரா. அப்போது முதலே, பல குழந்தைகளுக்கு, தனது மகள் பெயரில் நிறைய உதவிகளையும் செய்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது அவரது மகள் இறந்து 12 வருடங்கள் ஆன நிலையில், எமோஷனலான மனநிலையோடு, தனது மகளின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவருக்கு தங்கள் வருத்தத்தை கமெண்ட்ஸ்களாக பதிவுசெய்து வருகின்றனர்.