

சென்னை மண்ணடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியுள்ளது. அமைச்சரவையில் பங்கேற்கலாமா வேண்டாமா? என்பது குறித்து ஆலோசனை இன்று காலை நடைபெற்றது.
தமிழக அமைச்சரவையில் பங்கேற்குமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(IUML) மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றிற்கு தவெக சார்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்திருந்தார் . இந்த அழைப்பு குறித்து தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வரும் கட்சி தனது முடிவை இன்று அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
காதர் மொய்தீன் தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கி இருக்கிறது. தவெக ஆட்சி அமைக்க 2 எம்எல்ஏக்களை வைத்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு அளித்தது.
இந்நிலையில் அமைச்சரவையில் பங்கேற்குமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தவெக அழைப்பு விடுத்துள்ளது. தவெக அழைப்பை ஏற்று அமைச்சரவையில் பங்கேற்கலாமா வேண்டாமா என்பது குறித்து ஐ.யு.எம்.எல். தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கேற்பு என தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகான் அமைச்சராக பொறுப்பேற்கிறார் எனவும் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் அறிவித்துள்ளார்..