ஹிண்டன்பர்க் அறிக்கையால் ஓரே நாளில் ஜாக் டோர்சிக்கு 526 மில்லியன் டாலர் இழப்பு!

ஹிண்டன்பர்க் அறிக்கையால் ஓரே நாளில் ஜாக் டோர்சிக்கு  526 மில்லியன் டாலர் இழப்பு!

அமெரிக்காவில் மிகவும் பிரபலமான நிதியியல் சேவை நிறுவனமாக விளங்கும் Block Inc குறித்து ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையால் ஓரே நாளில் ஜாக் டோர்சி சொத்து மதிப்பு 526 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

அதானி குழுமத்தை தலைகீழாக புரட்டிப்போட்ட ஹண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் பிளாக் இன்க் பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டு பங்குகள் வேகமாக வளர்ச்சி அடைந்தது என குற்றம் சாட்டியுள்ளது. பிளாக் இன்க் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான ஜாக் டோர்சி மற்றும் ஜேம்ஸ் மெக்கெல்வி, தலைமை நிதி அதிகாரி அம்ரிதா அஹுஜா மற்றும் கேஷ் ஆப்-ன் முதன்மை மேலாளர் பிரையன் கிராஸடோனியா ஆகியோர் பல மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை திட்டமிட்டு விற்பனை செய்து பணமாக்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது ஹிண்டன்பர்க் ரிசர்ச்.

Block Inc குறித்து ஹிண்டன்பர்க் கடந்த 2 வருடமாக இந்நிறுவன நிதியியல் முடிவுகள் முதல் பல்வேறு ஊழியர்கள், உயர் அதிகாரிகள் மத்தியில் செய்த ஆய்வுகள் மூலம் இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

இந்த அறிக்கை வெளியானதில் இருந்து பிளாக் இன்க் பங்குகள் பெரிய அளவிலான சரிவை பதிவு செய்த நிலையில், பளாக் இன்க் நிறுவனரான ஜாக் டோர்சி-யின் சொத்து மதிப்பு ஓரே நாளில் 526 மில்லியன் டாலர் சரிந்து தற்போது வெறும் 4.4 பில்லியன் டாலர் உடன் மட்டுமே உள்ளார்.ஓரே நாளில் 11 சதவீத சொத்து மதிப்பை ஜாக் டோர்சி இழந்துள்ளார்.

அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் Block Inc சுமார் 44 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை கொண்ட நிறுவனமாக உள்ளது. ஜாக் டோர்சி தலைமையில் Block Inc அமெரிக்காவில் வங்கி சேவை இல்லாத, பெற முடியாத மக்களுக்கு எவ்விதமான தங்கு தடையும் இல்லாத வியக்கவைக்கும் நிதியியல் சேவைகளை தொழில்நுட்பத்தின் வாயிலாக அளிப்பதாக கூறிக்கொள்கிறது, ஆனால் உண்மையில் அப்படியில்லை என ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது.

நுகர்வோர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான மோசடியை எளிதாக்குவதற்கும், ஒழுங்குமுறையைத் தவிர்ப்பதற்கும் உதவியுள்ளது என ஹிண்டன்பெர்க் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிளாக் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் தெரிவித்துள்ள தரவுகள் படி இந்நிறுவனத்தின் 40% - 75% பயனர்கள் எண்ணிக்கை போலியானது அல்லது ஒரு தனி நபருடன் இணைக்கப்பட்ட பல்வேறு கணக்குகளை தனி கணக்காக காட்டப்பட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளது என்று ஹிண்டன்பெர்க் தெரிவித்துள்ளது.பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டு பிளாக் இன்க் பங்குகள் வேகமாக வளர்ச்சி அடைந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com