உதாரணமாக ஒரு வகை 10 ரூபாய் நாணயத்தில் ரூபாய் சின்னம் (₹)இருக்கும் மற்றொன்றில் ரூபாய் சின்னம்(₹)இருக்காது. ஆகவே ரூபாய் சின்னம் இல்லாத நாணயங்கள் செல்லாது என்று தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் மக்களும் கடைக்காரர்களும் ஏற்க மறுக்கின்றனர்.
இந்நிலையில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
- இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது:
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 14 வகை 10 ரூபாய் நாணயங்கள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் செல்லுபடி ஆகும். அவற்றை செல்லாது என கூறுவதோ அதனை பணப்பரிமாற்றத்தின் போது கொடுக்கவோ வாங்கவோ மறுப்பது சட்டப்படி குற்றமாகும். இந்திய தண்டனைச் சட்டம் 124ஏ வின் படி ஒருவர் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை வாங்க மறுத்தால் அது குற்றமாகும்.
அதன்படி இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நாணயங்களை வாங்க மறுப்பவருக்கும் மூன்று வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். மேலும், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் நபர் அல்லது கடையின் மீதும் இந்த சட்டத்தின்படி புகார் அளிக்கலாம்.
- இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.