

2026 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக காளை உரிமையாளர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். பல மாதங்களாக காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் ஜனவரி 17ஆம் தேதி தொடங்குகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான தேதிகளை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார்.அதன்படி அவனியாபுரத்தில் ஜன.15ம் தேதியும், பாலமேட்டில் ஜன.16ம் தேதியும், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன.17ம் தேதியும் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.