ஆஸ்கர் விருதை வென்றுள்ளது ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார் : தி வே ஆப் வாட்டர்’ !

அவதார்
அவதார்

ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’ படம் சிறந்த காட்சி அமைப்புக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் சிறந்த காட்சி அமைப்புக்கான (Visual Effects) ஆஸ்கர் விருதை ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’ (Avatar: The Way of Water) படம் வென்றது. இந்த படத்தின் காட்சி அமைப்பாளர்கள் ஜோ லெட்டரி, ரிச்சட் பனிஹம், எரிக் சைண்டான் மற்றும் டேனியல் பெரிட் ஆகியோர் ஆஸ்கர் விருதை பெற்றுக் கொண்டனர்.

2023 ஆம் ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விருது விழா மார்ச் 13 ஆம் தேதியான இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.. ஒவ்வொரு முறையும் ஆஸ்கார் விருது வழங்கும் போதும் இந்தியாவிலிருந்து அதற்கான கூடுதல் எதிர்பார்ப்பு எழுவதுண்டு.

Avathar 2
Avathar 2

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட்டின் பிரபல டால்பி தியேட்டரில் இன்று இந்திய நேரப்படி காலை 5:30 மணிக்கு தொடங்கியது. அந்த வகையில் இந்தியாவிலிருந்து “நாட்டு நாட்டு’ பாடல் , ஆல் தட் பிரீத்தஸ், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படைப்புகளுக்கு கிடைக்குமா என எதிர்பார்த்திருந்த நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் மற்றும் முதுமலை யானைகளை பராமரித்து வரும் தம்பதிகள் குறித்த தி எலிஃபண்ட் விஸ்பரரஸ் ஆவணப்படம் ஆஸ்கர் விருதினை வாங்கியுள்ளது.

அவதார் சீனாவில் வெளியான அனைத்து ஹாலிவுட் மற்றும் பிறநாட்டுப் படங்களின் வசூலை முறியடித்தது. உலகம் முழுவதும் அவதார் திரைப்படம் பல ரசிகர்களை உருவாக்கியது. அவதார் திரைப்படம் வசூலில் பல சாதனைகளை படைத்தது. இதனைத் தொடர்ந்து ஜேம்ஸ் கேமரூனின் அவதார் திரைப்படத்தின் 2 ஆம் பாகம் அவதார் ”தி வே ஆப் வாட்டர்” என பெயரிடப்பட்டு திரையில் வெளியாகி உலக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com